Dhanush-Kubera: தனுஷ் தயாரித்து இயக்கியிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் எதார்த்தமாக இருந்த கதையும் புது முகங்கள் என்பதாலும் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. அதே தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா நடித்துள்ள படம் தான் குபேரா.
ரிலீசுக்கு தயாரான தனுஷின் குபேரா
பல மாதங்களாக இதன் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டருடன் வெளிவந்துள்ளது. அதன்படி ஜூன் 20ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
தமிழ் தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் உலக அளவில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் தனுஷின் தோற்றம் அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது வெளியான போஸ்டரும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் ஹிந்தி படமும் நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இப்படியாக அவருடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.