Diwali Release 2025: இந்த வருடம் அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளியாகிறது. அதனால் இப்போது டாப் நடிகர்கள் அனைவரும் பரபரப்பாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகின்றனர்.
அதில் இந்த வருட தீபாவளிக்கு ஐந்து படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தனையுமே டாப் ஹீரோக்களின் படங்கள் தான். அதை பற்றி இங்கு காண்போம்.
இதில் சூர்யா, ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகும் சூர்யா 45 தீபாவளியை குறி வைத்துள்ளது. தற்போது அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு மோத தயாராகும் டாப் 5 ஹீரோக்கள்
இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படமும் தீபாவளிக்கு வரலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த வருடம் அமரன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து மீண்டும் தீபாவளியை குறி வைத்துள்ளார் எஸ்.கே. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் கூலி படம் ஆயுத பூஜை அல்லது தீபாவளியை குறி வைக்கலாம் என்கின்றனர்.
அதேபோல் தனுஷ் நடித்து வரும் தேரே இஷ்க் மெயின் படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படமும் இந்த ரேஸில் இணைய இருக்கிறது.
ஆனால் அண்ணன் படம் வருவதால் தம்பி வழி விடவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக இந்த தீபாவளிக்கு ஐந்து படங்கள் வெளியாக இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்.