Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பொய் சொன்னால் போஜனம் கிடையாது என்ற பழமொழிக்கு ஏற்ப தங்கமயில் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக எக்கச்சக்கமான பொய்களை சொல்லியதால் தற்போது எச்சில் இலை எடுக்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது. அதனால் முகம் சுழித்துக் கொண்டு பிடிக்காத வேலையை பார்த்து வருகிறார்.
அந்த நேரத்தில் தங்கமயில் அம்மா போன் பண்ணி பேசுகிறார். இதை பார்த்த அந்த ஹோட்டல் ரெஸ்டாரன்ட் ஓனர், வேலை செய்யும் போது போன் பேச கூடாது என்று தங்கமயிலை திட்டி விடுகிறார். உடனே தங்கமயில் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதை புரிந்து கொண்டு கணவரை கூட்டிட்டு பாண்டியன் வீட்டிற்கு பேசிட்டு வரலாம் என்று கிளம்பி விடுகிறார்.
அப்படி பாண்டியன் வீட்டிற்கு போன நிலையில் சகஜமாக பேசிவிட்டு தங்கமயில் வேலைக்கு போறது ரொம்ப தூரமாக இருக்கிறது. இப்போது அப்படி என்ன வேலைக்கு போக வேண்டிய அவசியம் இருக்கிறது, ஒரு குழந்தை எல்லாம் பெற்றதுக்கு அப்புறம் மெதுவாக போகலாமே என்று பாண்டியன் மற்றும் கோமதி இடம் சொல்கிறார்கள். அதற்கு பாண்டியன் பெண்கள் வேலைக்கு போறது நல்லது.
அவங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் அவங்களும் சுயமாக நிற்க முடியும் என்பதற்கு ஒரு ஆதாரமே வேலைக்கு போவது தான். அதனால் தங்கமயிலை பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் என்று சொல்கிறார். ஆனாலும் தங்கமயில் வேலைக்கு போவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாக்கியம் மற்றும் வீட்டுக்காரர் தொடர்ந்து பாண்டியனிடம் பேசுகிறார்.
பாண்டியனிடம் எதுவும் செல்லுபடி ஆகாது என்பதற்கு ஏற்ப வேலை விஷயத்தில் கரராக பேசி அவர்களின் வாயை அடைத்து விடுகிறார். அந்த வகையில் தங்கமயில் வேலைக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது. அடுத்ததாக சுகன்யா, சக்திவேல் மற்றும் முத்துவேல் வீட்டிற்கு சென்று சகஜமாக பேசிக் கொண்டு வருகிறார். இதை பார்த்து சக்திவேல் இதை வைத்து பாண்டியன் வீட்டில் பிரச்சனை பண்ணலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
இதனை தொடர்ந்து செந்தில் மற்றும் மீனா இருவரும், மீனாவின் அப்பா வீட்டிற்கு போகிறார்கள். அங்கே போனதும் செந்தில் அவருடைய சர்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துட்டு போயி காட்டுகிறார். இதை பார்த்த மீனாவின் அப்பா நீங்கள் படித்து முடித்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. அதனால் இப்பொழுது படித்து கவர்மெண்ட் வேலை வாங்குவது ரொம்பவே கடினம் தான். அதனால் ஒரு பத்து லட்ச ரூபாய் பணத்த கட்டி ஒரு வேலை வாங்கிவிடலாம்.
அதன் பிறகு அந்த வேலையை பார்த்துக்கொண்டு அடுத்தடுத்த பெரிய இடத்திற்கு போகலாம் என்று சொல்கிறார். அந்த வகையில் செந்திலிடம் 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு பண்ண சொல்கிறார். இதை கேட்டதும் செந்தில் பத்து லட்ச ரூபாவா என்று அதிர்ச்சியாகிவிட்டார். மீனாவும் இதெல்லாம் வேலைக்காகாது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் செந்தில், பாண்டியன் வீட்டில் என்ன நிலைமையில் இருக்கிறார், பணத்தை ஏற்பாடு பண்ண முடியாது என்பதை புரிந்து கொள்ளும் மீனாவின் அப்பா செந்திலுக்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க தயாராக போகிறார். அப்பொழுது செந்தில், அப்பா மற்றும் மாமனாரை கம்பேர் பண்ணி மாமனார் தான் பெஸ்ட் என்று அவர் பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மீனா இருக்கும் வரை இந்த மாதிரி எந்த ஒரு விஷயமும் நடக்காத படி பார்த்துக் கொள்வார்.