செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

பாக்யாவின் வெற்றியை தடுக்க கோபி செய்யும் சதி வேலைகள்.. ஓவர் குஷியில் ஈஸ்வரி, காதல் மமதையில் இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ஏதாவது பாக்கியாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து தேவையில்லாத பிரச்சனையில் தான் இழுத்து விட்டிருக்கிறார். அதாவது பாக்கியா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அதற்கு கோபி எனக்கு இரண்டு மாதம் அவகாசம் கொடு நானே வெளியே போய் விடுகிறேன் என்று சொல்லி இருந்தார்.

அந்த வகையில் போவதற்கு முன் பாக்யாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்த கோபி, எழில் மற்றும் செழியன் இடம் பேசி குடும்பத்தை வீட்டிற்கு கூட்டிட்டு வர பிளான் பண்ணி விட்டார். அவர்களும் கோபி சொன்னதும் சரி என்று சொல்லி வருவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார்கள். இந்த விஷயத்தை வீட்டிற்கு வந்த கோபி, ஈஸ்வரி பாக்யா மற்றும் இனியாவிடம் சொல்கிறார்.

இதை கேட்டதும் ஓவர் குஷியான ஈஸ்வரி, அப்படியா என்று கேட்ட இனியா மற்றும் இவர் எதுக்கு தேவையில்லாத வேலையை பார்க்கிறார் என்ற கடுப்பில் பாக்கியம் என மூன்று பேரும் ஒவ்வொரு ரியாக்சன் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதாவது ஈஸ்வரி பொருத்தவரை எல்லோரும் இருந்து விட்டால் நமக்கு பழைய மாதிரி அதிகாரம் பண்ண வாய்ப்பு இருக்கும் என்ற நினைப்பு.

இனியாவிற்கு தற்போது யார் வந்தால் என்ன, யார் போனா என்ன எனக்கு ஆகாஷ் இருக்கிறார் என்ற காதல் மமதையில் இருக்கிறார். ஆனால் பாக்யா தான் எல்லோருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அந்த வகையில் பாக்யா அப்செட் ஆக இருந்த பொழுது செல்வி அக்கா என்னாச்சு ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு பாக்யா நான் உண்டு என் வேலை உண்டு என்று வீட்டில் வேலையை பார்த்து ரெஸ்டாரண்டையும் பார்த்துக் கொண்டு வருகிறேன்.

இப்பொழுது கோபி நல்லவராக மாறிவிட்டார் என்பதற்காக எல்லோரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். ஆனால் அதன் பிறகு வரும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் நான் தான் சமாளிக்கணும். இப்பொழுது இனியவுக்கு மட்டும் காலையில் சாப்பாடு ரெடி பண்ணி கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்புகிறேன். ஆனால் எல்லோரும் வந்துவிட்டால் இனி அவர்களுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரிந்து கொண்டு ஒன்றாக சமைத்து அதன் பின்பு நான் வேலைக்கு போனால் எப்படி நான் அடுத்தடுத்த ரெஸ்டாரண்டை ரன் பண்ண முடியும் என்று செல்விடம் புலம்புகிறார்.

கோபி திருந்தாமல் இருக்கும் பொழுதும் பாக்யாவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. தற்போது திருந்திய பிறகும் பாக்யாவுக்கு மன உளைச்சலை கொடுக்கும் அளவிற்கு கோபி பல சதி வேலைகளை பார்த்து வருகிறார். ஆக மொத்தத்தில் இந்த கோபி கடைசி வரை பாக்யாவிற்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்.

Trending News