Gossip: தற்போது நம்பர் நடிகை தான் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். சமீப காலமாகவே இவர் செய்யும் பல விஷயங்கள் அவருக்கு பின்விளைவாக மாறுகிறது.
அதேபோல் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத விஷயங்களை கூட பொதுவெளிக்கு கொண்டு வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் இருந்தது அவருடைய அறிக்கை.
ஆனால் இதன் மூலம் அவர் உச்ச நடிகரை சீண்டி இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போதே இந்த உரசல் இருந்திருக்கிறது.
பெரிய நிறுவனத்திற்கு கொடுத்த குடைச்சல்
அந்த படத்தில் தன்னுடைய பெயருக்கு முன்னால் பட்டம் போட வேண்டும் என நடிகை பிடிவாதம் பிடித்திருக்கிறார். படத்தை தயாரித்த பெரிய கம்பெனி முடியாது என சொல்லி இருக்கின்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் இவருடைய டார்ச்சரை தாங்க முடியாமல் அந்தப் பெயரை போட்டு இருக்கின்றனர். ஆனால் இப்போது பார்த்தால் நடிகை எதுவும் நிரந்தரமில்லை எல்லாம் மாயை என்ற ரீதியில் பேசி இருக்கிறார்.
இது உச்ச நடிகரை கடுப்பேத்த தான் என்கின்றனர். இப்படி உள்குத்தோடு நடிகை செய்த வேலை கேலிக்கும் கிண்டலுக்கும் கூட ஆளாகி வருகிறது.