பாக்யா செல்வி நட்பில் கும்மி அடித்த இனியா.. இல்லாதபட்ட காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பம், சப்போர்ட் பண்ணும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் காதல் குடும்பத்திற்கு தெரிய வந்த நிலையில் ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் பாக்யா குடும்பத்தை பொறுத்தவரை காதலுக்கு எதிரி இல்லை. ஆனால் யாரை காதலிக்கும், எப்படிப்பட்ட இடத்தில் கால் வைக்கிறோம் என்பதன் முக்கியமாக தெரிகிறது.

அந்த வகையில் நம் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரியின் மகனை இனிய, காதலிப்பது தான் மிகப் பெரிய குற்றமாக அனைவரும் பார்க்கிறார்கள். அந்த வகையில் கோபி ஈஸ்வரி மற்றும் செழியன் அனைவரும் இனியவை திட்டி வீட்டிற்கு வந்த செல்வியும் அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்.

ஆனால் இந்த விஷயம் எல்லாம் தெரிந்த பிறகு பாக்யா எதுவும் சொல்லாமல் சைலண்டாக இருக்கிறார். ஒருவேளை பாக்யாவிற்கு இந்த காதல் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆகாஷ் மற்றும் இனியா தற்போது படித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் படித்து முடிக்கட்டும் அதுவரை இப்போதைக்கு எந்த பேச்சும் எடுக்க வேண்டாம்.

வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆன பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பாக்கியம் முடிவெடுக்க போகிறார். ஆனால் கோபி ஈஸ்வரி பொருத்தவரை இனியா, ஆகாஷை காதலித்தது தான் தப்பு என்பதற்கு ஏற்ப காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பாவம் இதற்கிடையில் அமிர்தாவும் மாட்டிக்கொண்டார் என்பதற்கு ஏற்ப அமிர்தாவையும் சைடு கேப்பில் ஈஸ்வரி அசிங்கப்படுத்தி விட்டார்.

எப்படி அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையுடன் இருக்கும் பட்சத்தில் பாக்யா உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தாலோ, அதே மாதிரி தனக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இனியா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார் என்று மொத்த பழியையும் தூக்கி பாக்கியம் மீது போட்டு விட்டார்.

அதுமட்டுமல்ல ஒரு பெண் குழந்தையை வளர்ப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு. ஆனால் அது எதையும் நீ செய்யாமல் ஒரு சாப்பாடை மட்டும் பண்ணி கொடுத்துவிட்டு நீ பேசாமல் உன் ரெஸ்டாரண்டுக்கு வேலை என்று போய் விடுகிறாய். உன் பொண்ண கண்டுகொள்ளாமல் விட்டது தான் இந்த அளவுக்கு வந்து பிரச்சினையாக இருக்கிறது என்று பாக்யாவை திட்டுகிறார்.

ஆனால் பாக்கிய எதுவும் பேச முடியாத சூழ்நிலையில் இருப்பதால் கோபி, ஈஸ்வரிடம் பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். ஆக மொத்தத்தில் பாக்கியாவிற்கு ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்பொழுது வரை செல்வி நட்பு தான் உறுதியாகவும் நல்ல ஒரு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதற்கும் கும்மி அடிக்கும் விதமாக இனியா சம்பவத்தை செய்து விட்டார்.

Leave a Comment