திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

மார்க்கெட் போச்சு மரியாதையும் போச்சு.. சோகத்தில் நடிகை எடுத்த முடிவு

Gossip: நம்பர் ஒன் நடிகையாக கெத்து காட்டி வந்த அவர் இப்போது வெத்துவேட்டாக மாறிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் நடிகையின் சமீப கால நடவடிக்கைகள் தான்.

ஆரம்பத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு தான் நடிகை அமைதியாக இருந்தார். ஆனால் போகப் போக அவருடைய ஒரிஜினல் குணம் வெளிவந்தது.

தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் இவர் காட்டிய அலப்பறை கொஞ்ச நெஞ்சம் கிடையாது. அதே போல் தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்டிட்யூட் காட்டி வந்தார்.

சோகத்தில் நடிகை எடுத்த முடிவு

ஆனால் இப்போது அந்த பட்டம் கைநழுவி இருக்கிறது. சமீபத்தில் நடிகை பட்டத்தை தூக்கி எறிந்ததெல்லாம் இந்த ஒரு காரணத்துக்காக தான்.

அதாவது அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் நடிகைக்கு இந்த பட்டப்பெயரை வைத்திருக்கிறது பட குழு. இது தெரிந்து கொண்ட நடிகை அவர்களிடம் பிரச்சனை செய்திருக்கிறார்.

ஆனால் அவர்களோ உங்களுக்கு மார்க்கெட் இல்லை. இந்த நடிகையின் படம் செம கலெக்ஷன் பார்க்கிறது. அதனால் இந்த பெயர் இவருக்கு தான் பொருந்தும் என நோஸ் கட் செய்து இருக்கின்றனர்.

இதனால் அதிர்ந்து போன நடிகை இந்த பட்டம் வேண்டாம் என்று நேக்காக அறிக்கை விட்டிருக்கிறார். குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலன்ற மாதிரி இருக்கு நடிகையின் நடவடிக்கை என பலரும் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

Trending News