வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

அட்லீக்காக இதுவரை செய்யாததை செய்யும் விஜய் சேதுபதி.. செட்டாகாததால் வாத்தியார் படும் பாடு

விஜய் சேதுபதி துண்டு துக்கடா கதாபாத்திரங்கள் பண்ண போவதில்லை என்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். எல்லா படங்களிலும் தலை காட்டுவதால் நம்ம படங்கள் சரியாக போவதில்லை என அவருக்கு ஒரு எண்ணம் இருந்து வருகிறது. இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

பழக்கவழக்கத்திற்காக, நட்புக்காக, தெரிந்தவர் தெரியாதவர்கள் என அனைவருக்கும் படம் பண்ணிய விஜய் சேதுபதி இன்று படங்களை செலக்ட் செய்து நடித்து வருகிறார். அப்படி நடிக்க ஆரம்பித்த பின் தான் அவருக்கு சரியான ஹிட்டாக மகாராஜா படம் அமைந்தது.

இப்பொழுது அட்லி தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார் விஜய் சேதுபதி. இந்த படம் அடுத்த மாத இறுதியில் பிரசாத் லேபில் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படம் இதுவரை விஜய் சேதுபதி நடிக்காத கதைக்களம் என்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடித்த 50 படங்களிலும் இதுவரை அவர் செய்யாத ஒன்றை இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் செய்ய சொல்லி இருக்கிறார். விஜய் சேதுபதியை சுமார் 20 கிலோ எடை குறைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். இந்த கதை களத்திற்கு அப்படி இருந்தால் தான் செட் ஆகும் என விஜய் சேதுபதியும் தன்னுடைய உடம்பை குறைத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் பங்கு பெற்ற ஒரு சிலம்பம் நிகழ்ச்சியில் சற்று உடல் மெலிந்து காணப்பட்டார். தினமும் 4 மணி நேரம் சிலம்பம் கற்று வருகிறார். இதனால் அவர் அடுத்து நடிக்கவிருக்கும் படம் சிலம்பம் சம்பந்தமான படமாக இருக்கலாம். இந்த படத்தில் புது விஜய் சேதுபதியை பார்க்கலாம் என்கிறார்கள் அட்லி மற்றும் பாலாஜி தரணிதரன்.

Trending News