Gossip: ஒரு படத்தில் நடித்து ஃபேமஸ் ஆகிவிட்டால் அடுத்தது நம்பர் ஒன் இடத்தை நோக்கி கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள் இப்போதைய நடிகைகள்.
அதற்கு அவர்கள் கையில் எடுக்கும் அஸ்திரம் கிளாமர் தான். அரைகுறை ஆடையில் நடித்தால் வாய்ப்பு வேண்டுமானால் கிடைக்கலாம்.
ஆனால் சினிமாவில் நீடித்து நிற்க முடியாது. அழகுடன் சேர்த்து கொஞ்சமாவது திறமையும் வேண்டும் என்பது பல நடிகைகளுக்கு தெரிவதில்லை.
ஓவர் நைட்டில் ஃபேமஸான நடிகை
இப்படி கிளாமரை மட்டும் நம்பி வந்த நடிகைகள் ஓவர் நைட்டில் காணாமல் போன கதையும் உண்டு. அப்படித்தான் தற்போது ஒரு நடிகை ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியான அந்த படத்தில் நடிகை தான் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அந்த ரொமான்டிக் பாடல்.
அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். அதேபோல் விரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி உள்ளாராம் அம்மணி.