வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

சௌந்தர்யாவின் இறப்புக்கு ரஜினியின் நண்பர் காரணமா.? திட்டமிட்ட கொலையா.? முழு பின்னணி

Soundarya: தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ் கர்நாடகா மலையாளம் என நடிகை சௌந்தர்யா மரணம் பற்றிய பேச்சு அதிர்வலையை கிளப்பியுள்ளது.

அதிலும் 21 ஆண்டுகள் கழித்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி தற்போது சிட்டிமல்லு என்பவர் இது விபத்து கிடையாது திட்டமிட்ட கொலை என புகார் கொடுத்துள்ளார்.

இதற்கு காரணம் ரஜினியின் நண்பரும் நடிகருமான மோகன்பாபு என குறிப்பிட்டுள்ளார். இதுதான் தற்போது இந்த பரப்பரப்பிற்கு முக்கிய காரணம்.

ஹைதராபாத்தில் சௌந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலம் இருக்கிறது. தற்போது அதன் மதிப்பு 100 கோடி என்கின்றனர்.

திட்டமிட்ட கொலையா.?

அந்த இடத்தை மோகன் பாபு விலைக்கு கேட்டிருக்கிறார். ஆனால் சௌந்தர்யாவின் அண்ணன் அமர்நாத் கொடுக்க மறுத்திருக்கிறார்.

அதனால் தான் மோகன் பாபு அவர்கள் இருவரும் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது போல் காட்டி அவர்களை கொலை செய்துவிட்டார் என அந்த புகாரில் இருக்கிறது.

அதன் பிறகு அந்த இடத்தில் மோகன் பாபு ஒரு விருந்தினர் மாளிகையை கட்டி இருக்கிறார். அதை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் என சிட்டி மல்லு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மோகன் பாபு தரப்பிலிருந்து என்ன மாதிரியான விளக்கம் வரும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதே சமயம் சௌந்தர்யாவின் கணவர் இது உண்மை கிடையாது.

எந்த நிலத்தையும் மோகன் பாபு ஆக்கிரமிக்கவில்லை. என் மனைவியின் மரணத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது பொய்யான தகவல் என தெரிவித்துள்ளார்.

Trending News