மார்ச் 27 ஆம் தேதி விக்ரமின் வீரதீர சூரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. பல பிரச்சனைகளை தாண்டி இந்த படத்திற்கு இந்த தேதியை குறி வைத்துள்ளனர். திடீரென இந்த படத்திற்கு இரண்டு மூன்று தடைகள் வந்தது ஆனால் அவற்றையெல்லாம் சரி செய்து இப்பொழுது ரிலீசுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் புது சிக்கல் ஏற்பட்டது. ரமலான் நோன்பு காரணமாக அரபு நாடுகளில் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் அங்கே உள்ள சென்சார் போர்டில் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.
வீரதீர சூரன் படக்குழு ஏற்கனவே படத்தை சென்சாருக்கு அனுப்பி விட்டனர். அதனால் இந்த படம் ரிலீஸ் ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளா மற்றும் ஆந்திராவிலும் பிரச்சனைகள் நீங்கி இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு எல்லா ரூட்டும் கிளியர் ஆக உள்ளது.
வீரதீரசூரன் ரிலீஸ் ஆகும் மார்ச் 27ஆம் தேதியைத்தான் இரண்டு பெரிய படங்கள் குறிவைத்து இருந்தன. ஆனால் இப்பொழுது அந்த படங்கள் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் வெளிவர இருந்த ஹர ஹர வீர மல்லு படம் இந்த தேதியில் இருந்து பின்வாங்கி விட்டது.
அதேபோல் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் எம்பிரான். இது ஏற்கனவே வெளிவந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம். இந்த படமும் மார்ச் 27ஆம் தேதியை குறிவைத்து இப்பொழுது ரிலீஸாகவில்லை. அதனால் வீரதீர சூரனுக்கு கேரளா மற்றும் ஆந்திராவில் ரூட்கிளியர் ஆகிவிட்டது.