சனிக்கிழமை, மார்ச் 15, 2025

பேரன், பேத்தி எடுக்கிற வயசுல 3வது திருமணம்.. உச்ச நடிகரின் அக்கப்போர்

Gossip: சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கூட கருத்தில் கொள்ளாமல் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிற்கின்றனர்.

இப்படி இருக்க உச்ச நடிகர் ஒருவர் 60 வயசை கடந்த நிலையில் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் இவர் பல இளைஞர்களின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு முதல் திருமணம் நடைபெற்ற நிலையில் சில காரணங்களினால் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் தன்னுடன் பணியாற்றிய பெண்ணையே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

60 வயதில் திருமணம் செய்து கொள்ளும் உச்ச நடிகர்

அந்தத் திருமணமும் சில நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. மேலும் அவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபத்தில் அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அவருடன் சில மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறாராம். இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனென்றால் நடிகரின் மகளுக்கு கடந்த வருடம் தான் பிரம்மாண்டமாக திருமணத்தை முடித்து வைத்தார்.

மகனுக்கும் 30 வயது எட்டிய நிலையில் திருமண வயதில் இருக்கிறார்‌. இவ்வாறு பேரன், பேத்தி எடுக்கும் வயதில் இப்போது இவருக்கு மூன்றாவது திருமணம் தேவையா என்று சினிமா வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது.

Trending News