சனிக்கிழமை, மார்ச் 15, 2025

ஒரே படத்தால் மொத்தமாக மரியாதையை இழந்த நடிகை.. வெளியில தல காட்ட முடியலையாம்

Gossip: பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அந்த நடிகர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் சர்ச்சையை தாண்டி வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வெற்றியை ஒட்டுமொத்த பட குழுவும் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த சீரியல் நடிகை மட்டும் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு முக்கிய காரணம் நடிகை தன் இமேஜ் டோட்டலாக டேமேஜ் ஆன வருத்தத்தில் இருக்கிறாராம். சின்னத்திரையில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை இந்த படத்தில் ரொம்ப தாராளம் காட்டி இருந்தார்.

மொத்தமாக மரியாதையை இழந்த நடிகை

சொல்லப்போனால் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் அதுவே அவருக்கு பின் விளைவாக மாறிவிட்டது.

தற்போது நடிகையை தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் அத்தனையுமே அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தான்.

அதுபோக ரசிகர்கள் இந்த படத்தில் நடித்ததால் நடிகை பற்றி மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இது எல்லாம் சேர்த்து நடிகையை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாம்.

நமக்கு சினிமா செட் ஆகாது சீரியல் பக்கமே போய்டுவோம் என்ற அளவுக்கு நடிகை யோசிக்கிறாராம். ஆனாலும் சுற்றி இருப்பவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என அட்வைஸ் கொடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Trending News