திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

காமெடி நடிகை பிந்துகோஷ் மரணம்.. கடைசி வரை நடந்த போராட்டம், அதிர்ச்சியில் திரையுலகம்

Bindu ghosh Passed Away: மூத்த நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் இன்று மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 76. தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளில் இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினி கமல் என முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

குடும்பம் பிள்ளைகள் என வாழ்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சை செய்தும் கூட குணமடையவில்லை.

காமெடி நடிகை பிந்துகோஷ் மரணம்

அதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் கொடுத்திருந்த பேட்டி அதிர்ச்சி அடைய வைத்தது. ஏனென்றால் உடல் மெலிந்து போய் ஆள் அடையாளம் தெரியாமல் இருந்த இவர் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என உதவி கேட்டிருந்தார்.

ஏற்கனவே நடிகர் விஷால் இவருக்கு பண உதவி செய்திருந்தார். அதை தொடர்ந்து kpy பாலா சமீபத்தில் இவரை சந்தித்து தன்னால் முடிந்த உதவியை செய்தார்.

இருப்பினும் உடல் உபாதைகளுடன் இவர் போராடித்தான் வந்தார். இந்நிலையில் தற்போது அவர் உடல்நல குறைவின் காரணமாக உயிர் நீத்துள்ளார்.

தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் அனைவரையும் மகிழ வைத்த இவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.

Trending News