Vijay Tv : விஜய் டிவி வந்து சில வருடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் அதில் ஒளிபரப்பாகும் புதுவிதமான நிகழ்ச்சிகள் தான். அவ்வாறு விஜய் டிவியில் பல வருடமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா.
இந்த நிகழ்ச்சி தொடங்கி ஆரம்பத்தில் இருந்தே இதை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சியை நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் கொண்டு செல்கிறார். இப்போதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மும்மொழிக் கொள்கை ஆதரிப்போர் மற்றும் எதிர்போர் பற்றி விவாதிக்க இருந்தனர். இதற்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி இருந்தது.
பிரபல நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யாமல் நிறுத்திய விஜய் டிவி
இதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில் இன்று நீயா நானா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த எபிசோடு வராததால் ரசிகர்கள் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசியல் கட்சிகள் இடையே முன்மொழிக் கொள்கை பற்றி விவாதம் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் ஊடகங்களில் இந்த விவாத நிகழ்ச்சி நடத்துவதற்கு அரசியல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எல்லோருக்குமே கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை இருக்கிறது.
ஆனால் நம்முடைய குரலை முடக்குவதற்கான முயற்சியாக இது தெரிகிறது. மேலும் மும்மொழி கொள்கை பற்றி எடுக்கப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி கண்டிப்பாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.