திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ஆறடி ஹீரோவுக்கு பொண்ணு கேட்டு சென்ற பிரபலம்.. துரத்தி துரத்தி அடித்த நடிகையின் அம்மா

Gossip: கல்யாண வயதை கடந்தும் ஆறடி ஹீரோ தற்போது வரை சிங்கிளாகவே சுற்றி வருகிறார். கல்யாணம் தான் ஆகவில்லையே தவிர பல காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஹீரோ. ஆரம்பத்தில் நல்ல பெயர் வாங்கி வந்த இவர் இப்போது மோசமான நபர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் வாரிசு நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இருவருக்கு தான் திருமணம் நடக்கப்போகிறது என்று நினைத்த நிலையில் தானாகவே அது பிரேக்கப் ஆகிவிட்டது. நடிகையோ வேறு ஒருவரை மணந்து விட்டார்.

இதனால் பார்ட்டி குடிகாரனாக இருந்த ஹீரோ முழு நேரா குடிகாரனாக மாறிவிட்டார். தயாரிப்பாளர்களும் இவரது நிலைமை பார்த்துவிட்டு பட வாய்ப்புகள் கொடுக்க மறுத்துவிட்டனர்.

நடிகையைப் பெண் கேட்க தூது அனுப்பிய ஹீரோ

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு மீண்டும் படத்தில் நடித்து வருகிறார். எப்படியாவது முன்னணி ஹீரோ இடத்தை பிடித்து விட வேண்டும் என குட்டிக்கரணம் அடித்து வருகிறார். ஆனால் அது எதுவுமே செல்லுபடி ஆகவில்லை.

இந்த சூழலில் தான் தன்னுடன் நடித்த ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தான் சென்று பெண் கேட்டால் பிரச்சனை வேறு மாதிரி ஆகும் என்று தனது நண்பரை அனுப்பி வைத்துள்ளார் ஆறடி ஹீரோ.

இதைக் கேட்டு நடிகையின் அம்மா அதிர்ச்சி அடைந்து தூது விட்டவரை விரட்டி விரட்டி அடித்து விட்டுள்ளார். இந்த பொண்ணு நமக்கு கிடைக்கலையே என்று பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் ஆறடி ஹீரோ.

Trending News