திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

நெஞ்சு வலியில் படுத்த பாண்டியன்.. அரசியால் காதலால் வெடிக்கும் பூகம்பம்

Pandian Stores 2 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரசி வீட்டில் கோச்சிங் கிளாஸ் செல்வதாக பொய் சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.

ஆனால் தனது காதலன் குமாரவேலுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் சரவணன் கண்ணில் கையும் களவுமாக அரசி மற்றும் குமரவேல் மாட்டிக் கொண்டனர். கோபத்தில் குமரவேலை அடிக்கிறார் சரவணன்.

அப்போது உன் தங்கச்சி தான் என்ன காதலிக்கிறாள் என்று குமரவேல் சொல்ல அதிர்ச்சி அடைகிறார் சரவணன். உடனடியாகவே அரசியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்பம் ஒட்டுமொத்தமும் இருக்கும் நிலையில் சரவணன் உண்மையை போட்டு உடைக்கிறார்.

அரசியின் காதல் விவகாரத்தை போட்டு உடைத்த சரவணன்

அரசி கிளாஸ் போறேன்னு பொய் சொல்லிட்டு காதலனுடன் தியேட்டருக்கு போய் இருக்கா என்று சரவணன் கூறுகிறார். அதைக் கேட்டு கோமதி அதிர்ச்சி அடைந்து என் பொண்ணு அப்படி செய்ய மாட்டா என கூறுகிறார்.

இல்ல அரசி நம்மள ஏமாத்திட்டா, உன் அண்ணன் பையன தான் அவ விரும்புறா என்று சரவணன் போட்டு உடைத்தார். எல்லோரும் அதிர்ச்சி அடைய குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பாண்டியன் நெஞ்சு வழியில் விழுந்து விடுகிறார்.

இதனால் எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து வரவுள்ளது. இல்லையென்றால் அரசியின் காதல் விஷயத்தை சொன்னால் குடும்பம் இப்படி நிலைகுலைந்து போகும் விடுமே என்று சரவணின் கனவாக கூட இது இருக்கலாம். இதனால் வீட்டில் உண்மையை மறைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Trending News