சினிமா செய்திகள்

பேரனின் படிப்பை நிறுத்திய தனுஷ்.. உண்மையை உளறிய கஸ்தூரி ராஜா

By Arun · 18 மார்ச் 2025 · Updated 18 மார்ச் 2025
kasthuri-raja-dhanush

Dhanush: இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டு மகன்கள் தான் செல்வராகவன் மற்றும் தனுஷ். இதில் டைரக்ஷனை செல்வராகவன் கையில் எடுத்த நிலையில் நடிப்பில் தனுஷ் ஆர்வம் காட்டி வந்தார்.

அதோடு இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என தனது திறமையை தனுஷ் வளர்த்துக்கொண்டார். அவ்வாறு பவர் பாண்டி படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக அவருடைய 50வது படமான ராயன் படத்தை இயக்குகிறார்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கிய படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் தனது சகோதரியின் மகன் பவிஷை கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

தனுஷால் பேரன் படிப்பு போச்சுன்னு கூறிய கஸ்தூரி ராஜா

ஆனால் படம் சரியாக போகாமல் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சூழலில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு பட விழா மேடையில் சில விஷயங்களை பேசி இருந்தார். அதாவது எனது பேரன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிவிட்டார்.

எங்களது மூன்றாவது தலைமுறையும் இப்போது சினிமாவில் வந்துவிட்டது. மேலும் பேரன் பவிஷ் நன்றாக படிக்கக்கூடியவன். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

அவனின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவனது மாமா தனுஷ் சினிமாவுக்கு அழைத்து சென்று விட்டான் என்று கூறியிருக்கிறார். எந்தத் துறையில் இருந்தாலும் படிப்பு மிகவும் முக்கியம். இவ்வாறு தனுஷ் தனது சகோதரியின் மகன் படிப்பை நிறுத்தி விட்டா சினிமாவுக்கு அழைத்து வந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.