
Ajith-Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி உலக அளவில் வெளியாகிறது. ஏற்கனவே வெளிவந்த டீசர் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது.
அதை அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் நேற்று படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. திரையரங்கம் அலறட்டும் விசில் பறக்கட்டும் என ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது இப்பாடல்.
அதை அஜித் வெறியர்கள் கொண்டாடி வரும் நிலையில் காத்துவாக்கில் ஒரு செய்தி பரவியுள்ளது. அதாவது குட் பேட் அக்லி, ஆந்திரா துணை முதல்வர் நடித்து வரும் OG இரு படங்களும் ஒரே கதையை மையப்படுத்தியது தானாம்.
குட் பேட் அக்லி கதை
அதாவது கேங்ஸ்டர் வாழ்க்கையை உதறி விட்டு புது வாழ்க்கையை தொடங்குகிறார் ஹீரோ. ஆனால் அவருடைய கடந்த காலம் அவரை துரத்துகிறது.
அந்த அடையாளத்தை அழிக்க மீண்டும் கேங்ஸ்டர் ஆக மாறும் ஹீரோ எதிரிகளை எப்படி பழி வாங்கினார் என்பதுதான் குட் பேட் அக்லி கதை. இதே கதை கருதான் பவன் கல்யாணின் OG படமும்.
இது இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கதை கரு ஒன்றாக இருந்தாலும் விசுவலாக இரு படமும் வேறு வேறு பாதையில் தான் இருக்கும்.
மேலும் ஆதிக் ஃபேன் பாயாக மாறி தெறிக்கவிட்டுள்ளார். அதனால் இந்த செய்திகள் படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. நிச்சயம் அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.