விஜய் டிவி செட்டாகல, சன் டிவிக்கு வந்த நடிகை.. சுந்தரி நாயகனுக்கு ஜோடியாகவும் பேரழகி

vijay-tv-jishnu
vijay-tv-jishnu

Vijay Tv : இப்போது வெள்ளித்திரையில் படங்களை காட்டிலும் சின்னதிரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல் தான் சுந்தரி.

தமிழகத்தில் இந்த தொடர் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சுந்தரி தொடரில் வில்லனாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஜிஷ்ணு. இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் கதாநாயகனாக ஒரு தொடரில் கமிட்டாகி இருக்கிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக விஜய் டிவி நடிகை நடிக்க இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரேஷ்மா முரளிதரன். இவர் அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்திருந்தார்.

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு வந்த நடிகை

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரில் நடித்தார். இதில் எஸ் ஏ சந்திரசேகர், சஞ்சய் போன்ற பிரபலங்கள் நடித்தனர். ஆனால் சில காரணங்களினால் இந்த தொடர் மிக விரைவில் முடிவுற்றது.

அதன் பிறகு மீண்டும் ஜீ தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொடரில் நடித்தார் ரேஷ்மா. அந்தத் தொடரும் திடீரென முடிவுக்கு வந்தது. விஜய் டிவியில் ரேஷ்மாவுக்கு செட்டாகவில்லை என்பதால் இப்போது சன் டிவிக்கு தாவி இருக்கிறார்.

ஜிஷ்ணுவுக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்கும் தொடருக்கு செல்லமா என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த தொடரை பிரைம் டைமில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இந்த தொடர் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல திறமையான நடிகையான ரேஷ்மாவிற்கு இந்த தொடர் கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement Amazon Prime Banner