
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், யார் பேச்சையும் கேட்காமல் இஷ்டத்துக்கு முடிவெடுத்த ஈஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார் இனியா. அதாவது வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளை ஊர் தான் அடக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அது போல தான் வீட்டில் அடங்காமல் இருந்த ஈஸ்வரியை போலீஸ் மூலம் அடக்கி விட்டார்.
நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று எல்லோரும் சொல்லிய நிலையில் ஈஸ்வரி கோபியை கைக்குள் போட்டுக் கொண்டு தன் நினைத்து தான் நடக்க வேண்டும் என்று நிச்சயதார்த்த வேலைகளை பார்க்க மாப்பிள்ளை குடும்பத்தை வீட்டிற்கு வரவழைத்து விட்டார். அப்பொழுது இனியா சொன்னபடி போலீஸ் வந்த நிலையில் கட்டாயப்படுத்தி எந்த ஒரு விஷயமும் நடத்த முடியாது என்று புரிய வைத்துவிட்டு நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார்கள்.
இதனால் ஈஸ்வரி எதுவும் பேச முடியாமல் கோபத்தை காட்டி போய்விடுகிறார். அடுத்ததாக வீட்டில் நடந்த விஷயத்தை ரெஸ்டாரண்டில் பாக்யா யோசித்துப் பார்த்து பீல் பண்ணுகிறார். அப்பொழுது செல்வி இதற்கெல்லாம் காரணம் ஆகாஷ் தான் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு பாக்கியா, உன் பையன் மீது மட்டும் தவறில்லை இரண்டு பேரும் தான் தவறு இருக்கிறது.
ஆனாலும் நம் எடுத்து சொல்லிய பொழுது இரண்டு பேருமே புரிந்துகொண்டு நடக்கிறார்கள் இதுவே பெரிய விஷயம் தான் என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி வீட்டில் இருப்பவர்களை ஒன்றாக வரவழைத்து நான் இந்த வீட்டில் இருப்பதற்கு முக்கிய காரணமே ஒரு சில விஷயங்களை நல்லபடியாக முடித்துவிட்டு போக வேண்டும் என்றுதான். அப்படி எல்லாம் கை கூடிய நிலையில் இனியா பிரச்சினை வந்தது.
அதனால் அதை சரி செய்ய வேண்டும் என்று நானும் அம்மாவும் முடிவு பண்ணினோம். ஆனால் அதுவும் பிரச்சினையாகி போய்விட்டது, இனி யாருக்காக நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும். அதனால் நான் ஒரேடியாக இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம் என்றும் முடிவு பண்ணி விட்டேன் என்று கோபி சொல்கிறார். ஆனால் வெளியே போகிறேன் என்று சொன்னதற்கு யாருமே எந்த ரியாக்ஷன் கொடுக்கவில்லை. போனால் போயிட்டு வாங்க என்பது போல் தான் இருந்தது.
ஆனால் ஈஸ்வரி மட்டும் அதிர்ச்சியாகி கோபியை தடுக்க பார்க்கிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு போவதற்கு தயாராகி விட்டார். இந்த சூழ்நிலையில் எழிலை கூட்டிட்டு ஆகாஷை பார்த்து எக்ஸாமுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இனியா செல்வி வீட்டுக்கு போகிறார். அப்படி ஆகாஷிடம் பேசிவிட்டு வெளியே வரும் பொழுது ஆகாஷ் அப்பா பார்த்துவிட்டு நேரடியாக பாக்யா வீட்டிற்கு வந்து ஈஸ்வரி மற்றும் கோபியிடம் சண்டை போடுகிறார்.
இதனால் கோபப்பட்ட கோபி மறுபடியும் வீட்டிலேயே இருக்கலாம் என்று முடிவு பண்ணப் போகிறார். அத்துடன் இனியாவிற்கும் புதுசாக பிரச்சினை வர ஆரம்பித்துவிட்டது. ராதிகாவுடன் கோபி இருந்த பொழுது இனிய தான் தேவை இல்லாமல் செண்டிமெண்டாக பேசி கோபி ராதிகா பிரிவதற்கு காரணமாக இருந்தார்.
தற்போது கோபி எப்படி போனாலும் பரவாயில்லை தன்னுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்று இனியா முடிவெடுத்து விட்டார். இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும் பாக்யா வழக்கம்போல் எல்லாத்தையும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.