ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம், பாண்டியன் முத்துவேல் எடுத்த முடிவு.. ஆட்டையை கலைக்க போகும் சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் பழனிவேலுவை கூட்டிட்டு ஒரு இடத்திற்கு போயிட்டு வரேன் என்று சொல்லிட்டு கிளம்புகிறார். அப்படி கிளம்பும்போது சக்திவேல் வாசலில் நின்று பாண்டியனை அவமானப்படுத்தி கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் எப்படித்தான் வெளியே கிளம்ப முடியுதோ என்று நோகடித்து பேசுகிறார்.

அதற்கு பழனிவேலு, சும்மா வாய மூடிக்கிட்டு இருக்கோம் என்று வாய்க்கு வந்தபடி எதுவும் பேசத் தேவையில்லை என்று மச்சானுக்காக அண்ணனிடம் வாக்குவாதம் பண்ணுகிறார். பிறகு முத்துவேல் வந்ததும் சக்திவேலு அடங்கிய நிலையில் பாண்டியன் பழனிவேல் கூட்டிட்டு போய்விடுகிறார். பிறகு சக்திவேல், குமரவேலுமிடம் இனி உஷாராக இருந்து கொள் எப்படியாவது நினைத்ததை சாதித்து காட்டு. அது உன்னுடைய கையில் தான் இருக்கு என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

இனியும் இந்த குமரவேலு அமைதியாக இருக்க மாட்டார் என்பதற்கு ஏற்ப தான் அரசிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கப் போவதாக தெரிகிறது. பிறகு பாண்டியன் எங்கே போனார் என்று தெரியாமல் எல்லோரும் அமைதியாக இருக்கும் பட்சத்தில் அரசிக்கு போன் வருகிறது. உடனே கோமதி, அரசிடம் உனக்கு தான் போன் வருகிறது என்று சொல்கிறார். அதற்கு அரசி நான் எடுக்கவில்லை நீயே எடுத்து பேசு என்று சொல்லி விடுகிறார்.

உடனே கோமதி எடுத்து பேசியதும் காலேஜுக்கு வரவில்லையா என்று நண்பர்கள் ஃபோனில் கேட்கிறார்கள். அதற்கு இன்னைக்கு மட்டுமில்லை எப்பொழுதுமே இனி அரசி காலேஜுக்கு வரமாட்டாள் என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார். உடனே மீனா கோபத்தில் எந்த முடிவும் எடுக்காதீங்க, அரசின் படிப்பு ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார். அதற்கு கோமதி போதும் போதும் அவள் படித்த எல்லாம் கிழித்தது.

இனியும் யார் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிய நிலையில் தங்கமயில் மற்றும் ராஜி, அரசிக்கு சப்போட்டாக கோமதி இடம் பேசுகிறார்கள். அப்பொழுது கோமதி, அரசி வாழ்க்கைக்காக நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணி முத்துவேலுவிடம் பேசப்போகிறார். அப்போது சக்திவேல் வழக்கம்போல் கோமதி குடும்பத்தை கிண்டல் அடித்து பேசுகிறார்.

ஆனால் கோமதி எதையும் கண்டு கொள்ளாமல் முத்துவேலுவை அண்ணன் என்று கூப்பிட்டு என் மீது என்ன கோபம் இருந்தாலும் அதை என்னிடம் காட்டுங்க. தயவுசெய்து என்னுடைய பொண்ணு வாழ்க்கையை வம்பாக்காதீங்க என்று சொல்லி கெஞ்சுகிறார். உடனே முத்துவேல், என்ன உரிமையில் அண்ணன் என்று கூப்பிடுகிறாய். நீ என்னுடைய தங்கச்சியை இல்லை என்று முடிவு பண்ணி பல வருஷம் ஆகிவிட்டது.

ஆனாலும் என்னுடைய குடும்பத்தால் உன்னுடைய மகளின் வாழ்க்கை வீணாகாது. அதற்கு நான் வாக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி கோமதியே ஆறுதல் படுத்தி அனுப்பி வைக்கிறார். அத்துடன் முத்துவேலு, குமரவேலுமிடம் நான் வாக்கு கொடுத்து இருக்கிறேன் அதை நீ தான் காப்பாற்ற வேண்டும். மேலும் நாம் மதுரைக்கு போக வேண்டும், அங்கே உனக்கு பொண்ணு பார்த்து வைத்திருக்கிறேன் என்று முத்துவேல் சொல்கிறார்.

அதற்கு சக்திவேல், திடீரென்று இப்படி சொன்னால் என்ன அர்த்தம் யார் எந்த குடும்பம் எதுவும் தெரியாமல் எப்படி போவது என்று கேட்கிறார். அதெல்லாம் எனக்கு தெரியும் நான் எல்லாம் விசாரித்துவிட்டேன் நாம் அந்த பொண்ணே பேசி முடித்து குமரவேலுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முத்துவேலு சொல்கிறார். ஒரு பக்கம் முத்துவேல் குமரவேலுக்கு பொண்ணு பார்க்கிறார், இன்னொரு பக்கம் பாண்டியன் அரசிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்.

அந்த வகையில் ஒரே நேரத்தில் ஏற்பாடு பண்ண போகும் இந்த இரண்டு கல்யாணத்தையும் நிறுத்தி குமரவேலுக்கு அரசியை கட்டி வைத்து விடுவார் சக்திவேல். இதற்கு உடந்தையாக எல்லாத்தையும் இருந்து செய்யப்போவது பழனிவேலுவின் மனைவியாக வந்திருக்கும் சுகன்யா தான்.

Leave a Comment