Rashmika Mandanna : நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா இப்போது படங்களில் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி வருகிறது.
அல்லு அர்ஜுன் உடன் அவர் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. பாலிவுட்டிலும் படு பிஸியாக இருக்கும் ராஷ்மிகா இப்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சிக்கந்தர் படத்தில் நடித்திருக்கிறார்.
இதில் சல்மான் கான், சத்யராஜ், கிஷோர் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தைப் பற்றி நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது.
60 வயது நடிகருடன் ஜோடி போட்ட ராஷ்மிகா
அதில் சல்மான் கானுக்கு 59 வயதாகும் நிலையில், தனது மகள் வயது உடைய ராஷ்மிகாவுடன் ஜோடி போடுகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இதற்கு சல்மான் கான் பதிலளித்து உள்ளார்.
அதாவது எனக்கும், ராஷ்மிகாவுக்கும் கிட்டத்தட்ட 31 வயசு வித்தியாசம் இருக்கிறது. இதைப் பற்றி ராஷ்மிகாவோ அவரது அப்பாவோ கவலைப்படவில்லை.
நீங்கள் ஏன் இவ்வாறு கவலைப்படுகிறீர்கள் என்ற ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். அதோடு வருங்காலத்தில் ராஷ்மிகாவின் அனுமதியுடன் அவரது மகளுடனும் ஜோடி போட்டு நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
சினிமாவில் கதாநாயகிகளுக்கு என்று குறிப்பிட்ட காலம் தான் இருக்கிறது. ஹீரோக்கள் 70 வயதை தாண்டியும் ஹீரோக்களாகவே நடிப்பது வழக்கம் தான். பாலிவுட்டில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் இதே நிலைமைதான்.