48 மணி நேரம் கெடு, நீதிமன்றம் அதிரடி.. இடியாப்ப சிக்கலில் வீர தீர சூரன்

Veera Dheera Sooran: நேற்று வீர தீர சூரன் படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற பதட்டம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

எதிர்பார்த்தது போலவே இன்று காலை காட்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 12 மணிக்கு மேல் படம் வெளியாகும் என செய்திகள் கசிந்தது.

ஆனால் தற்போதைய நிலவரப்படி படத்தின் முதல் காட்சி மதியத்திற்கு மேல் தான் தொடங்கும் என தெரிகிறது. தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இடியாப்ப சிக்கலில் வீர தீர சூரன்

அதன்படி டிஜிட்டல் உரிமம் தொடர்பாக இந்த வழக்கை B4U தொடர்ந்துள்ளது. டிஜிட்டல் வியாபாரம் முடிவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டது.

அதில் 50% தொகையை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உடனடியாக 7 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பான மற்றும் படம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதை அடுத்து தற்போது விக்ரம், எஸ் ஜே சூர்யா, அருண்குமார் ஆகியோர் தங்களுடைய சம்பளத்தின் ஒவ்வொரு பகுதியை தற்காலிகமாக விட்டுக் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இன்னும் சற்று நேரத்தில் அந்த அறிவிப்பு வரும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Leave a Comment