Gossip: சும்மா இருந்த ஏழரையை அவரே வாங்கிக் கொண்ட மாதிரி தான் உச்ச நடிகர் இப்போது பல்வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலில் நுழைந்ததில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் அரசியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் அவருக்கு பிரச்சனையை உண்டு செய்து இருக்கின்றனர். உச்ச நடிகருக்கு நேரடியான எதிரியாக இருப்பது அந்த அரசியல் வாரிசு தான்.
ஆரம்பத்தில் நட்பு பாராட்டி வந்த இவர்கள் இப்போது அரசியலில் நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றனர். இதன் காரணமாக உச்ச நடிகருக்கு எவ்வாறு குடைச்சல் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வாரிசு செயல்படுத்தி வருகிறாராம்.
டாப் நடிகருக்கு பிரச்சனை கொடுக்கும் பிரபலம்
அதாவது உச்ச நடிகரின் படம் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியிடப்பட்டது. அதே நாளில் வேறு ஒரு பிரபல நடிகரின் படத்தையும் வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். இதனால் உச்ச நடிகரின் தயாரிப்பாளர் கவலையில் உள்ளாராம்.
ஏனென்றால் உச்ச நடிகர் கேட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுத்திருக்கிறார். ஏனென்றால் இவரது படம் எப்படியும் அதிக வசூல் செய்துவிடும் அதனால் நமக்கு லாபம் தான் என்று கணக்கிட்டு இருக்கிறார்.
ஆனால் இப்போது வேறு ஒரு நடிகரின் படம் அதே நாளில் வெளியாக்குவதால் வசூலில் மிகுந்த நெருக்கடி ஏற்படும். இதனால் தயாரிப்பாளர் போட்ட பட்ஜெட்டே எடுப்பது கஷ்டம்தான்.