Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பார்க்க வருகிறார்கள் என்ற விஷயத்தை பாண்டியன், குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிடுகிறார். உடனே மீனா ராஜி, அரசியின் படிப்பு விஷயத்தை பற்றி கேட்கிறார்கள். அதற்கு பாண்டியன் கல்யாணத்துக்கு பிறகு அந்த வீட்டில் போய் படித்துக் கொள்ளட்டும் என்று சொல்லிவிடுகிறார்.
அரசியும் அப்பா என்ன சொன்னாலும் சரி என்று சொன்னதனால் அடுத்தடுத்து கல்யாண வேலைகள் எல்லாம் பார்ப்பதற்கு தயாராகி விட்டார்கள். ஆனாலும் அரசி நடந்த விஷயத்தை நினைத்து தனியாக பீல் பண்ணுகிறார். உடனே சுகன்யா, அரசி மனசை மாற்றும் விதமாக யாரோ ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு உனக்கு பிடிச்ச மாமா பையனையே கல்யாணம் பண்ணி வச்சா நீயும் சந்தோசமா தானே இருப்ப, அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.
உன்னை பற்றி யோசிக்காதவங்களுக்காக நீ என் கவலைப்படணும், உன் வாழ்க்கையும் விட்டுக் கொடுக்காதே. குமரவேலுடன் பழகுனது சும்மா கிடையாது, அதனால் பெரியவங்க ஆயிரம் சொன்னாலும் அதை நீ பெரிசாக எடுத்துக் கொள்ளாதே. எப்படியாவது குமரவேலுடன் உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா கேட்டுக் கொண்டார்.
உடனே மீனா, என்ன சொன்னீங்க வீட்டில் இவ்ளோ பிரச்சனை நடந்த பிறகும் நீங்க எப்படி அவளிடம் அதை பற்றி பேசலாம். நீங்க தான் இவளை இப்படி பேசி இந்த அளவுக்கு மாற்றினீர்களா, அவளுடைய நல்லது கெட்டது எல்லாத்தையும் அவங்களுடைய அப்பா அம்மா முடிவு பண்ணட்டும். நீங்கள் தேவையில்லாமல் பேசி அவளுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம். இத்தனை நாளாக நீங்கள் இவளிடம் பேசியது எல்லாமே குமரவேலு பற்றி தானா?
அவன் எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்கு தெரிந்தும் எப்படி அவனுக்காக நீங்கள் அரசிடம் வக்காலத்து வாங்கி பேசுகிறீர்கள் என்று சுகன்யாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு மீனா திட்டி விடுகிறார். உடனே சுகன்யா, உங்க இஷ்டத்துக்கு எதுவும் பேச வேண்டாம் அரசி ஆசைப்பட்ட காரணத்திற்காக தான் நான் அவளுக்காக பேசினேன் என்று சொல்கிறார்.
அதற்கு மீனா, நீங்க உங்க வேலைய மட்டும் பார்த்தால் போதும். அரசி விசயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லி அரசியை வீட்டுக்குள் கூட்டிட்டு போய் விடுகிறார். அடுத்ததாக சுகன்யா, சக்திவேலு வீட்டிற்கு சென்று பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தையும் மாப்பிள்ளை பார்க்க வராங்க என்பதையும் பற்றி போட்டுக் கொடுக்கிறார். உடனே அந்த கல்யாணத்தை நிப்பாட்டி எப்படியாவது நீ அரசியை கல்யாணம் பண்ண வேண்டும் என்று குமரவேலுவிடம் சொல்கிறார்.
குமரவேலு எப்படி என்று கேட்கும் பொழுது கோமதியை எப்படி பாண்டியன் திருட்டு கல்யாணம் பண்ணினானோ, அதே மாதிரி நீயும் அந்த வீட்டுப் பெண்ணே திருட்டு கல்யாணம் பண்ணிக்கோ. அதை எப்படி என்னவென்று நான் சொல்லத் தேவையில்லை உனக்கே தெரியும் என்று கிரிமினல் வேலையை பார்ப்பதற்கு மகனுக்கு சக்திவேல் ஐடியா கொடுத்து விடுகிறார்.
அடுத்து சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லும் பொழுது ராஜி அம்மா கேட்டுக்கொண்டார். உடனே அங்கு நடக்குதே இங்கே வந்து சொல்ற பழக்கத்தை விடுங்க. அது ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது கிடையாது, இங்க வந்திங்கனா பார்த்து பேசிட்டு இருந்துட்டு போங்க. அதை விட்டுட்டு தேவையில்லாமல் விஷயத்தில் தலையிட்டு பிரச்சினையை பெருசா ஆக்காதீங்க என்று ராஜி அம்மாவும் சுகன்யாவை கண்டித்து விடுகிறார். ஆக மொத்தத்தில் அரசி குமரவேலு ஒன்று சேர்ந்து பாண்டியன் குடும்பத்தை தோற்கடிக்க போகிறார்கள்.