Empuraan Collection: லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான எம்புரான் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பிருத்விராஜ், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை எம்புரான் படம் பெற்று இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் முதல் நாளில் 6.10 கோடி வசூல் செய்தது. இதுவரை மலையாள சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் படம் பெற்றிருந்தது.
முதல் நாளில் எம்புரான் செய்த கலெக்ஷன்
ஆடு ஜீவிதம் படம் முதல் நாளில் 9 கோடி வசூலை பெற்றது. இப்போது அதை முறியடித்து எம்புரான் படம் இந்திய அளவில் 22 கோடி வசூல் செய்து இருக்கிறது.
மலையாளத்தில் 19 கோடி, தெலுங்கில் 1.2 கோடி, தமிழில் 80 லட்சம், ஹிந்தியில் 50 லட்சம் மற்றும் கன்னடத்தில் 5 லட்சம் வசூல் பெற்றிருக்கிறது. மேலும் நேற்றைய தினம் விக்ரமின் வீர தீர சூரன் படம் வெளியாக இருந்தது.
ஆனால் இந்த படம் சிக்கலில் மாட்டியிருந்ததால் மாலையிலிருந்து தான் படம் திரையிடப்பட்டது. இதனால் வீரதீர சூரன் படத்தை பார்க்க இருந்த பெரும்பாலான ரசிகர்கள் எம்புரான் படத்தை பார்த்தனர்.
இதனாலும் இப்படத்தின் வசூல் அதிகரித்தது. மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே எம்புரான் படம் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.