ஜிவி பிரகாஷ் உடன் டேட்டிங்.? ஓப்பனாக பேசிய திவ்ய பாரதி

GV Prakash : பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார். பள்ளி பருவத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் 12 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு காரணம் ஜிவி பிரகாஷ் தான் என்ற ஒரு தரப்பு கூறப்பட்டது.

அதாவது படங்களில் ஜிவி பிரகாஷ் நடிகைகளுடன் ஓவர் நெருக்கம் காட்டி வருவதாகவும் அது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கு பெற்று வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் பிரச்சனையில் திவ்யபாரதி கொடுத்த விளக்கம்

அதோடு விவாகரத்திற்கு மனு தாக்கல் செய்ய சென்றபோது கூட ஒரே காரில் இருவரும் சென்றனர். இந்த சூழலில் திவ்யபாரதியுடன் ஜிவி பிரகாஷ் டேட்டிங் செய்ததாக செய்தி பரவி வந்த நிலையில் இது குறித்த நடிகை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் குடும்ப பிரச்சனையில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அதோடு வெளிப்படையாக சொல்லப்போனால் ஒரு நடிகருடன் நான் டேட்டிங் செய்ய மாட்டேன்.

அதுவும் திருமணம் ஆனவுடன் டேட்டிங் செய்யவே மாட்டேன். தேவையில்லாத மற்றும் ஆதாரமற்ற வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் எல்லை மீறி இது சென்று கொண்டதால் இதற்கு பதிலளிப்பதாக திவ்யபாரதி குறிப்பிட்டு இருக்கிறார்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்