தலைவருக்கு எதிரி வெளில இல்ல.. எல்லாத்துக்கும் முட்டுக்கட்டையா இருக்கும் விசுவாசிகள்

Gossip: எப்படியாவது நாற்காலியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் அந்த கட்சி தலைவர். ஆனால் கூடவே இருக்கும் செவ்வாழை தடை போடுகிறதாம்.

இவர் கட்சி ஆரம்பித்த கையோடு அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தினர். அதேபோல் இவர் வந்த வேகத்தில் பிரபல கட்சி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியது.

அதற்கேற்றார் போல் அந்த தலைவரும் வாயை கொடுத்து மாட்டிக் கொள்வதில் கில்லாடியாக இருக்கிறார். அவருடைய பேச்சு நடவடிக்கை பிடிக்காத பலர் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.

தலைவருக்கு எதிரி வெளில இல்ல

அதில் பெண் பிரபலம் ஒருவர் புது கட்சியில் சேர ஆர்வம் காட்டியிருக்கிறார். தலைவரும் கூட அவரை கட்சியில் சேர்க்க நினைத்திருந்தாராம்.

ஆனால் வியூகம் வகுக்கும் டீம் குறுக்க வந்து கட்டையை போட்டிருக்கிறது. தலைவரை சந்திக்கும் முன் அந்த பெண் பிரபலத்திடம் ஏகப்பட்ட கேள்வியை கேட்டு சங்கடப்படுத்தி இருக்கின்றனர்.

இதனால் அவர் கட்சியில் சேரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். இப்படியாக தலைவருக்கு எதிரி வெளியில இல்ல என கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருக்கிறது அவருடைய கட்சி நிலை.

Leave a Comment