Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், குடும்பத்திடம் மாட்டிய பிறகும் உண்மையை சொல்ல முடியாமல் ரோகிணி மறுபடியும் பொய் சொல்லி அனைவரது காதிலும் பூ சுத்தி விட்டார். இருந்தாலும் பாட்டி, இனிமேல் இந்த குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் ஆகவும் பொய் சொல்லாமல் உண்மையை மட்டும் சொல்லக்கூடிய மருமகளாகவும் இருப்பேன் என்று சத்தியம் கேட்கிறார்.
அதன்படி ரோகிணியும் சூடான் மேல் சத்தியம் செய்து எந்த பொய்யும் சொல்ல மாட்டேன் உண்மையை மறைக்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். பிறகு பாட்டி, ரோகினியை ரூமுக்குள் போக சொல்லி விடுகிறார். அப்படி ரோகிணி ரூம்குள் போகும் பொழுது இதற்கு காரணமான முத்து மற்றும் மீனா மீது கோபப்பட்டு முறைத்துக் கொண்டே போகிறார்.
பிறகு பாட்டி, விஜயா பேராசை காரணமாக தான் இந்த மாதிரி ரோகிணி பொய் சொல்லி இருக்கிறாள் என்பதை சுட்டிக்காட்டி விஜயாவையும் கண்டித்து ஊருக்கு கிளம்பி விட்டார். அடுத்து ரூமுக்குள் போன மனோஜிடம் ரோகிணி நன்றி சொல்கிறார். அதற்கு மனோஜ் உன்னை அடிக்க கூடாது என்று என்னிடம் கேட்டதற்காக அம்மாவிடம் நான் பொய் சொல்லி உன்னை காப்பாற்றினேன்.
ஆனால் நீ என்னையே முட்டாளாக்கி விட்டாயே? இனி உன்னை நான் எப்படி நம்புவது என்று கேட்கிறார். எத்தனை பொய் சொல்லி என்னை நம்ப வைத்து இருக்கிறாய். இப்பொழுது கூட முத்து உண்மையை கண்டுபிடிக்கவில்லை என்றால் நீ என்னைக்கும் என்னிடம் உண்மையை சொல்லி இருக்க மாட்டாய். எனக்கு உன் மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது, வேறு ஏதாவது பொய் இருக்கிறதா என்று கேட்கிறார்.
உடனே ரோகினி நான் செஞ்சது எல்லாமே தப்பு தான். ஆனால் அதற்கு உன் மீது நான் வைத்த காதல்தான் காரணம். உன்னுடன் எப்படியாவது சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் இத்தனை பொய் சொல்லி விட்டேன். இனி நான் உன்னிடம் எதையும் மறைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யப் போகிறார். உடனே மனோஜ் உன்னுடைய சத்தியமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று மாடிக்கு போகிறார்.
அப்படி மாடிக்கு போகும்போது அங்கே முத்து மீனா சுருதி ரவி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மறைந்திருந்து மனோஜ் கேட்கிறார். அதாவது முத்துவுக்கு இன்னும் பார்லர் அம்மா மீது சந்தேகம் இருப்பது போல் சொல்கிறார். அப்பா அவ்வளவு மோசமானவர் என்று ரோகினி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட அப்பா போட்டோவை வீட்டிற்கு கொண்டுட்டு வந்து விட்டார்.
ஆனால் கடைசிவரை அம்மாதான் கூட இருந்து எல்லா கஷ்டங்களையும் தாண்டி வளர்த்திருக்கிறார் என்றால் அம்மா ஃபோட்டோவை ஏன் இன்னும் கொண்டு வரவில்லை. இதில் ஒரு ரகசியம் இருக்கிறது, இன்னும் ரோகினி நம்மிடம் ஏதோ ஒரு விஷயம் மறைக்கிறார். அது மட்டுமில்லாமல் ரோகிணி பற்றிய விஷயம் எதுவும் மனோஜ்க்கு தெரியாது. ரோகினியை காப்பாற்றுவதற்கு தான் மனோஜ் பொய் சொல்லி இருக்கிறார் என்று முத்து அனைவரிடமும் சொல்கிறார்.
அதற்கு சுருதி எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்ட பொழுது மனோஜ்க்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் ஏன் அவன் குடித்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் ரகளை பண்ணி ஏமாந்து நிற்க வேண்டும். இதற்கு பின்னாடி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று முத்து சொல்லிக் கொண்டிருப்பதை மனோஜ் கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் ரூமுக்குள் போய்விடுகிறார். ரூம்குள் போன மனோஜ், ரோகினிடம் பேசாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார். ரோகினியும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.
அடுத்ததாக விஜயா சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது, முத்து கலாய்க்கும் விதமாக ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தைகள் என்ன. இப்ப நடந்திருப்பது என்ன என்று விஜயாவை வச்சு செய்கிறார். அத்துடன் அண்ணாமலையும், உனக்கு பிடிச்ச மருமகள் ரோகிணி என்று தலையில் தூக்கி வைத்து ஆடினியே இப்ப என்ன நடந்திருக்கு பாத்தியா என்று கேட்கிறார்.
மேலும் சுருதி, உங்களுக்கு பிடிச்ச மருமகள் உங்களை ஏமாற்றி விட்டாள். இப்பொழுது உங்களுக்கு யார் ரொம்ப பிடிக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்று ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து வித்யாவை வச்சு செய்கிறார்கள். அந்த வகையில் விஜயாவுக்கு இருக்கும் கோபத்தை காட்டும் விதமாக இனி வீட்டு வேலைகளையும் எடுபடி வேலைகளையும் ரோகிணியே தான் பண்ண சொல்வார். அதனால் கொஞ்ச நாளைக்கு மீனாவுக்கு ரெஸ்ட் கிடைத்து விடும்.