Gossip : ராசியான நடிகை என்று பெயர் பெற்ற அவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். அவர் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி விடுகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் அந்த நடிகையின் கால் சீட்டுக்காக காத்திருக்கும் நிலையில் எக்கச்சக்க படங்கள் குவிந்து வருகிறது. அவரது காதலரும் நடிகராக இருக்கும் நிலையில் அவரது படங்கள் பெரிதாக போகவில்லை.
இதனால் தயாரிப்பில் இறங்கிய நடிகர் தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்தார். இதற்கு மேல் படம் எடுக்க பணம் இல்லாததால் நடிகையிடம் பணத்தை கறந்து வருகிறாராம்.
திருமணத்திற்கு முன்பே நடிகையிடம் பணத்தை வாங்கும் நடிகர்
நடிகையோ காதலர் கேட்பதால் அவரும் வாரி கொடுத்து வருகிறார். இது நடிகையின் பெற்றோருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். கல்யாணத்துக்கு முன்பே இவ்வாறு தனது மகளிடம் பணத்தை பிடுங்கி வருகிறார் அந்த நடிகர் என்று கடுப்பில் இருக்கிறார்கள்.
அதோடு தனது மகளிடமும் உன்னை ஏமாற்றி விட்டால் என்ன செய்வாய், இப்படி பணத்த நீ பாட்டுக்கு தூக்கி கொடுக்கிற என கண்டித்தும் இருக்கின்றனர். ஆனால் அவர் என்னை ஏமாற்ற மாட்டார் என்று நம்பிக்கையில் நடிகை பிடிவாதமாக இருக்கிறாராம்.
இப்போது நடிகர் எடுக்கும் படம் பிளாப் ஆகிவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஆகையால் அந்தப் படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறாராம் நடிகர்.