போற போக்குல விஜய்யை சீண்டும் அஜித்.. ஒரே டயலாக், ஏப்ரல் 10 கலவரம் கன்ஃபார்ம்

Ajith-Vijay: சோசியல் மீடியா பக்கம் போனாலே குட் பேட் அக்லி அலப்பறை தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் சினிமா விமர்சகர்கள் ஒரு பக்கம் புது புது தகவல்களாக இறக்கி வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக போகும் இப்படத்திற்கு பல மாதங்களாக எதிர்பார்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியால் சில மாதங்கள் தள்ளிப்போன குட் பேட் அக்லி ரசிகர்களின் தரிசனத்திற்கு வருகிறது.

ஏற்கனவே படத்தில் ஒத்த ரூபா தாரேன், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ஆகிய பாடல்கள் இருப்பதாக செய்திகள் கசிந்தது. அதை அடுத்து மற்றொரு முக்கிய தகவலும் வந்துள்ளது.

போற போக்குல விஜய்யை சீண்டும் அஜித்

அதன்படி இப்படத்தில் இடைவேளை காட்சி வேற லெவலில் மிரட்டலாக இருக்குமாம். அதிலும் அஜித் பேசும் அந்த ஒரே ஒரு டயலாக் தியேட்டரை அலற விடப்போகுது.

அப்படி என்ன வசனம் என்றால் விஜய் சமீபத்தில் மேடையில் பேசி பரபரப்பை உண்டாக்கிய வாட் ப்ரோ வசனம் தான். இதற்கு முன்பே சீமான் இதை பேசி இருக்கிறார்.

ஆனால் விஜய் பேசியதற்கு பிறகு தான் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு அதிகரித்தது. அந்த வசனத்தை தான் அஜித் பேசியிருக்கிறார். இப்படியாக போற போக்கில் தளபதியை சீண்டி இருக்கிறது படகுழு.

இது அஜித் ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக இருக்கும். ஆனால் விஜய் ரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

சும்மாவே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிளாப் என ஹாஸ் டேக் போட்டு கொண்டாடுவார்கள். இதில் இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறது என்று தெரிந்தால் நிச்சயம் சோசியல் மீடியாவில் கலவரம் வெடிக்கும்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்