அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டில் நிலாவுக்கு நடந்த அவமானம்.. உச்சகட்ட கோபத்தில் சோழன் பல்லவன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் தாலி கட்டினாலும் நடந்த கல்யாணம் வெறும் பொம்மை கல்யாணம் தான் என்ற நம்பிக்கையில் நிலா சோழன் வீட்டில் தங்கி இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்த நிலாவிற்கு படித்த சர்டிபிகேட் தேவைப்பட்டது.

ஆதனால் அண்ணிக்கு போன் பண்ணி சர்டிபிகேட் எடுத்துத் தருமாறு கேட்டார். அண்ணியும் சரி என்று சொல்லிய நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. உடனே இது தான் சான்ஸ் என்று நிலாவுக்கு போன் பண்ணி நீ வீட்டிற்கு வா நான் தருகிறேன் என்று நிலாவின் அம்மா கூப்பிட்டு விட்டார். அதை நம்பி நிலாவும் பல்லவனை கூட்டிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.

ஆனால் அங்கே போய் பார்த்தால் எல்லாமே டிராமா என்பதற்கு ஏற்ப நிலாவின் அப்பா சூழ்ச்சி செய்து விட்டார். அதாவது நீ இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும், அந்த குடும்பத்திற்கு போகக்கூடாது என்று பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் நிலாவுக்கு எங்கே மறுபடியும் அந்த மாப்பிள்ளையுடன் கல்யாணம் பண்ணி வைத்து விடுவாரோ என்ற பயத்தினால் இருக்க மாட்டேன் சர்டிபிகேட் மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கேட்டார்.

உடனே கோபப்பட்ட நிலாவின் அப்பா சர்டிபிகேட் அனைத்தையும் எரித்து விட்டார். நிலாவால் எதுவும் பண்ண முடியாமல் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறி பல்லவனை கூட்டிட்டு வந்து விட்டார். நிலா ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார் என்று தெரிந்த பல்லவன் நிலாவுக்கு ஆறுதல் சொல்லி அண்ணியை சாப்பிட வைப்பதற்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகிறார்.

அப்படி சாப்பிட்டு வெளியே கிளம்பிய நிலையில் நிலாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வந்து பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே நிலா, அவனை அவமானப்படுத்தி போலீசுக்கு தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லி பயமுறுத்தி அங்கு இருந்து போக வைத்து விட்டார். பிறகு பல்லவனை கூட்டிட்டு நிலா சோழன் வீட்டுக்கு மறுபடியும் வந்து விட்டார். நிலா மீண்டும் வந்து விட்டதால் சேரன் சோழன் சந்தோஷம் அடைந்து விட்டார்கள்.

அடுத்ததாக நிலா அந்த வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் பொறுப்பில் இறங்கி வீட்டை சுத்தம் செய்கிறார். ஆனால் சோழனின் அப்பா சுத்தமே இல்லாமல் சிகரட்டை குடித்து விட்டு கண்ட கண்ட இடத்தில் போட்டதால் நிலா அதற்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே சோழனின் அப்பா உன்னுடைய அட்வைஸ் எல்லாம் எனக்கு தேவையில்லை, அதையெல்லாம் என்னுடைய பசங்க கிட்டயே வச்சுக்கோ.

இது என்னுடைய வீடு எப்படி இருக்கணும் என்ன பண்ணனும் எனக்கு தெரியும் என்று எல்லோரும் முன்னாடியும் நிலாவை அவமானப்படுத்தி பேசி விட்டார். இதனை பார்த்த பல்லவன் மற்றும் சேரன் கோபப்பட்டு அப்பாவிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். பிறகு நிலா அழுது கொண்டே வீட்டிற்குள் போன நிலையில் சேரன் மற்றும் சோழன் சமாதானப்படுத்துகிறார்கள்.