Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தம்பி சத்யாவை கடத்தி வைத்து மயக்க ஊசியை போட்டுவிட்டால் பரீட்சை எழுத முடியாது. அத்துடன் எந்த வேலையும் பார்க்க முடியாததால் தன்னுடனே மறுபடியும் வந்து சேர்ந்து விடுவார் என்று தப்பு கணக்கு போட்ட லோக்கல் ரவுடி சிட்டியை கையும் களவுமாக முத்து பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து விட்டார்.
அந்த வகையில் சத்யாவை காப்பாற்றிய முத்து, எக்ஸாமுக்கும் சரியான நேரத்தில் விட்டுவிட்டார். அடுத்ததாக ரோகிணி வேலை பார்த்ததற்கான சம்பளமாக 20000 ரூபாய் கிடைத்தது என்று சொல்லி விஜயாவிடம் கொடுக்கிறார். அதற்கு விஜயா நான் என்ன பண பேயா? நீ கொடுத்ததும் வாங்கிடுவனா என்று எல்லோரும் முன்னாடியும் திட்டுகிறார்.
அதற்கு ரோகினி நான் அப்படி நினைத்துக் கொடுக்கவில்லை எங்க அம்மா ஸ்தானத்தில் தான் உங்களை வைத்து பார்க்கிறேன். இப்பொழுது எனக்கு அம்மா இல்லாததால் உங்களிடம் தான் கொடுப்பேன் என்று சொல்லி விஜயாவிடம் சென்டிமென்ட் டிராமாவை போடுகிறார். அதாவது விஜயாவின் வீக்னசை புரிந்து கொண்ட ரோகிணி, அடிக்கடி விஜயாவுக்கு பணத்தை கொடுத்து தாஜா பண்ணிடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்.
அதுக்கு ஏற்ற மாதிரி விஜயாவும் ரோகிணி கொடுத்த பணத்தை வாங்கிவிட்டு எண்ண ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக நீ பொய் சொல்லி எங்களை ஏமாற்றியதற்கு இனிமேல் எல்லா சம்பளப் பணமும் எனக்கு வந்து சேர வேண்டும். இதுதான் நீ தப்பு பண்ணுவதற்கு பயன் என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் மீனா எல்லோருக்கும் சாக்லேட் வந்து கொடுக்கிறார்.
உடனே விஜயாவுக்கு பயம் வந்துவிட்டது, மீனா அம்மாவாக போகிறாளோ அதனால் தான் சாக்லேட் கொடுக்கிறார் என்று எண்ணம் வந்துவிட்டது. அதன் பிறகு மீனா என்னுடைய தம்பி நல்லபடியாக எக்ஸாம் எழுதி காலேஜ் படிப்பை முடிக்க போகிறார் என்ற சந்தோஷத்தில் சாக்லேட் கொடுக்கிறேன் என்று சொன்னதும் விஜயா பெருமூச்சு விட்டார். அதாவது மருமகள் மகன்தான் வேண்டாம் என்றாலும் அதன் மூலமாக வருகின்ற குழந்தையும் விஜயாவுக்கு பிடிக்காமல் தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட விஜயாவுக்கு ரோகிணி தான் சரியான ஆளு என்பதற்கு ஏற்ப தான் ரோகிணியின் கேரக்டரும் இருக்கிறது. அடுத்ததாக மீனாவின் தங்கை சீதா அம்மாவை கூட்டிட்டு ட்ராபிக் போலீஸ் அருண் வீட்டுக்கு போய் நன்றி தெரிவிக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய காதல் கூடிய சீக்கிரத்தில் கல்யாணத்தில் போய் முடிந்து விடும். அடுத்ததாக மீனாவுக்கு கல்யாண மண்டபத்தில் பெரிய டெக்கரேஷன் ஆர்டர் கிடைத்திருக்கிறது.
ஆனால் அதற்கு அட்வான்ஸ் பணமாக இரண்டு லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்பதால் முத்து, அண்ணாமலையிடம் உதவி கேட்க வருகிறார். ஆனால் முத்து என்ன சொல்ல வருகிறார் என்று காது கொடுத்து கூட கேட்காத விஜயா, உன் பொண்டாட்டி பிசினஸ்க்காக என்னுடைய வீட்டு பத்திரத்தை வைத்து உனக்கு பணம் வாங்கி கொடுக்கணுமா என்று வம்பு பண்ண ஆரம்பித்து விட்டார்.
ஆனால் முத்து நிச்சயம் அந்த மாதிரி ஒரு உதவி கேட்க வரவில்லை. அண்ணாமலையிடம் வேறு உதவிதான் கேட்க வந்திருப்பார், அதன் பிறகு வழக்கம் போல் விஜயா அவமானப்பட்டு நிற்கப் போகிறார். அடுத்ததாக மீனாவுக்கு கிடைத்திருக்கும் இந்த ஆர்டர் மூலம் அடுத்த கட்ட லெவலில் ஜெயிக்கும் அளவிற்கு வெற்றி கிடைக்கப் போகிறது.