இது ட்ரெய்லர் தான் இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு.. மத்திய, மாநில அரசுக்கு எதிராக இறங்கும் தளபதி, சூடு பிடிக்கும் களம்

Vijay-TVK: விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பல அரசியல் பிரபலங்களுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. அதை கடந்த ஒரு வருட காலமாக நடக்கும் சம்பவங்கள் மற்றும் மேடைப்பேச்சுகள் மூலம் உணர முடிகிறது.

அதேபோல் விஜய் சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் TVK, DMK இரு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என குறிப்பிட்டு இருந்தார். இதனால் மற்ற கட்சிகள் கோபத்தில் கொந்தளித்து கருத்து தெரிவித்தனர்.

இந்த சூழலில் விஜய் இன்னும் சில வாரங்களில் தன்னுடைய கடைசி பட வேலைகளை முடித்து விடுவார் என தகவல்கள் வந்துள்ளது. அதன் பிறகு தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஸ்ட்ராங்காக ஆட போகிறாராம்.

சூடு பிடிக்கும் களம்

இதுவரைக்கும் நடந்தது எல்லாமே ட்ரைலர் தான். இனிமேல்தான் மெயின் பிக்சரே காத்திருக்க என்கின்றனர் கட்சித் தொண்டர்கள். ஏற்கனவே தன்னுடைய அரசியல் எதிரி யார் என்பதை விஜய் சொல்லிவிட்டார்.

அதை அடுத்து அவர்களுக்கு ஆட்டம் காட்ட அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் அவர் தயாராகி இருக்கிறார். கட்சி ஆரம்பித்தது முதல் எளிய மக்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் தான் எங்கள் தலைவர்.

முதல் மாநாட்டில் அவர் கலங்கியது கூட தனக்கு கிடைத்த ஆதரவும் அன்பும் பார்த்து தான். அதனாலயே தன் மக்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியில் அவர் இருக்கிறார்.

விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடக்கப் போகிறது. அப்போது பல அதிர வைக்கும் சம்பவங்கள் நடக்கப் போகிறது இனிமேதான் களம் சூடு பிடிக்கும்.

70 ஆண்டு கட்சியாக இருந்தாலும் இதுவரை இப்படி ஒரு ஆள் நம்மை எதிர்த்ததில்லை என்ற அளவுக்கு இருக்கும். வரும் தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான் என tvk கட்சித் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.