Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் ஹோட்டலில் வேலை பார்ப்பதை பார்த்த சரவணன் எதற்காக பொய் சொல்லி என்னையும் முட்டாளாக்கி குடும்பத்தையும் ஏமாற்றினாய் என்று கேள்வி கேட்கிறார். அதற்கும் தங்கமயில் உண்மை சொல்லாமல் சர்டிபிகேட் எங்கே என்று தெரியவில்லை. அதனால் வேறு வேலைக்கு போக முடியாத சூழ்நிலையால் இந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் படி அமைந்துவிட்டது என்று சொல்லி சமாளிக்கிறார்.
ஆனாலும் நீ பொய் சொன்னது தவறு தான் என்று சரவணன் கோபப்பட்டு போய் விடுகிறார். அடுத்ததாக மீனா ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் சக்திவேல் மீது தவறு இருப்பதை பாண்டியன் மற்றும் கோமதி இடம் சொல்கிறார். அதற்கு பாண்டியன் நீ எது செய்தாலும் சரியாக தான் இருக்கும். நீ பார்க்கிற வேலைக்கு உண்மையாக இருக்கிறாய் அது போதும் என்று சொல்கிறார்.
அடுத்ததாக அரசிக்கு பாண்டியன் பார்க்கும் மாப்பிள்ளை போன் பண்ணி பேசுகிறார். ஆனால் அரசி குற்ற உணர்ச்சியால் இந்த மாப்பிள்ளையிடம் சரியாக பேச முடியாமல் போனை வைத்து விடுகிறார். பிறகு அந்த மாப்பிள்ளை மீனாவுக்கு போன் பண்ணி அரசிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இருக்கிறதா? என்னிடம் சரியாக பேசமாட்டிருக்கிறாள் என்று சொல்கிறார். அதற்கு மீனா, அரிசி கூச்ச சுபாவம் அதனால் தான் சரியாக பேசியிருக்க மாட்டாள்.
இன்னும் கொஞ்ச நாள் ஆன எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு அரசியை பார்க்க மீனா போகிறாள். அப்பொழுது அரசி எனக்கு அவர் கால் பண்ணினார் ஆனால் என்னால் பேச முடியவில்லை என்று சொல்கிறார். அதற்கு மீனா ஏன் என்று கேட்கும் பொழுது போனவாரம் வேறு ஒருவருடன் பேசினேன். அதற்குள் இந்த வாரம் இவருடன் பேச வேண்டும் என்றால் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்று சொல்கிறார்.
உடனே மீனா அவனுடன் பேசினதை நினைத்து நீ பீல் பண்ண தேவையே இல்லை. ஏனென்றால் அவன் உன்னை ஏமாற்றி இருக்கிறான். அவனும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையும் ஒன்னு கிடையாது. இந்த மாப்பிள்ளையை பார்க்கும் பொழுது நல்லவராக தான் தெரிகிறது. அதனால் உன்னுடைய அப்பா அம்மா சொல்வதைக் கேளு என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
ஒரு பக்கம் சுகன்யா வந்து குமரவேலுவிடம் பேசிப் பழகு என்று சொல்கிறார், இன்னொரு பக்கம் மீனா வந்து பாண்டியன் பார்த்திருக்கும் சதீஷிடம் பேசி கல்யாணம் பண்ணு என்று சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார். இப்படி ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அரசி முழித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக கோவிலுக்கு போக வேண்டும் என்று கோமதி அரசி மீனா ராஜி தயாராகிவிட்டார்.
அந்த நேரத்தில் வீட்டுக்குள் வந்த தங்கமயிலிடம் ராஜி நீங்களும் எங்களுடன் வந்தால் ஐந்து பேரும் சந்தோஷமாக போயிட்டு வரலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு கோமதி அவளுக்கு தான் லீவே இல்லாமல் வாரத்தில் ஏழு நாளும் ஆபீஸ் இருக்கிறது என்று சொல்கிறார். உடனே சரவணன், எல்லோரும் முன்னாடியும் எப்ப சொல்ல போகிறாய் என்று தங்கமயிலை பார்த்து கேட்கிறார். தங்கமயில் ஹோட்டலில் வேலை பார்ப்பதை சரவணன் குடும்பத்தில் இருப்பவரிடம் போட்டு கொடுக்கப் போகிறார்.