சிம்புவுடன் நடிக்க ஓகே சொன்ன சந்தானம்.. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா.!

Simbu: சிம்பு நடிப்பில் படங்கள் வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. மற்ற ஹீரோக்களின் படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். அதை போக்கும் பொருட்டு அவருடைய பிறந்தநாளில் அடுத்தடுத்த பட அப்டேட்டுகள் வெளிவந்து மூச்சு முட்ட வைத்தது.

அதன்படி ராம்குமார், அஸ்வத், தேசிங்கு பெரியசாமி என அடுத்தடுத்த இயக்குனர்கள் அவரின் லிஸ்டில் இருக்கின்றனர். இதில் தேசிங்கு பெரியசாமி உடன் இணையும் வரலாற்று படத்தை சிம்புவே தயாரிக்கிறார்.

சிம்புவுடன் நடிக்க ஓகே சொன்ன சந்தானம்

இந்நிலையில் சமீபத்தில் STR 49 படத்தில் இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வந்தது. தற்போது அனிருத்தை ஓரம் கட்டும் அளவுக்கு இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

நிச்சயம் இப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆகும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். அதே சமயம் இப்படம் பற்றிய மற்றொரு தகவலும் வந்துள்ளது.

அதாவது சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையிலிருந்து இறங்கி வந்துள்ளார். அதன் முதற்கட்டமாக இப்படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ஏற்கனவே இந்த செய்திகள் வந்தாலும் தற்போது அது உறுதியாக இருக்கிறது. அது மட்டும் இன்றி இப்படத்திற்காக 7 கோடிகள் அவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

ஆக மொத்தம் சந்தானம் காட்டில் இனி மழை தான். அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் இவரை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.