ஜனநாயகன் டாட்டா போட்டதால் பலாப்பழம் போல் மொய்க்கப்படும் அஜித்.. ரேஸுக்கு ரெடியான லக்கி மேன்

விஜய் சினிமாவிற்கு எண்டு கார்டு போட்டு விட்டார் அடுத்த பெரிய ஹீரோ என்று பார்த்தால் ரஜினி, அஜித் கமல், மூவரும் தான். அஜித்தை தவிர மற்ற இருவரும் பிசியாக இருப்பதால் இப்பொழுது பலாப்பழம் போல் அஜித்தை மொய்த்து வருகிறார்கள் பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள்.

ஒரு பக்கம், மைதிலி மூவி மேக்கர்ஸ், கே வி என், ரெட் ஜாயிண்ட் மூவிஸ், வேல்ஸ் இன்டர்நேஷனல். டான் பிக்சர்ஸ் என அனைவரும் அஜித்தை நாடி வருகிறார்கள். ஏற்கனவே அஜித்163 கோடிகள் சம்பளமாக பெறுகிறார். குட் பேட் அக்லி அடித்த கலெக்ஷனால் இன்னும் கூட சம்பளத்தை ஏற்றுவார் என தெரிகிறது.

இன்னொரு பக்கம் அடுத்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அடுத்த ப்ராஜெக்ட் ரெடி ஆவதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் ரேஸுக்கு நான்கு இயக்குனர்கள் ரெடியாகிவிட்டனர். இவர்களுள் யாருக்கு அஜித் ஓகே சொல்லுவார் என்பது தெரியவில்லை.

அஜித்தை இயக்கும் லிஸ்டில், ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இடம்பெருவாரா அல்லது அவரிடம் ஏற்கனவே தனுஷ் ஒரு கதையை சொல்லி டெவலப் செய்திருக்கும் தனுசுக்கா என்று தெரியவில்லை. இவர்கள் இருவரும் காத்துக் கொண்டு இருக்கையில் ரேசில் நானும் இருக்கிறேன் என புதிதாய் வந்துவிட்டார் லக்கி பாஸ்கர் பட புகழ் வெங்கி அட்டுலூரி .

இதில் குட் பேட் அக்லி அடித்த வசூல் வேட்டையால் மீண்டும் மைதிலி மூவி மேக்கர் மற்றும் ஆதிக் கூட்டணியுடன் அஜித் இணைவார் என்று தெரிகிறது. அஜித்திற்கு அவர்கள் இன்னும் 10 கோடி அதிகமாக கொடுத்து அடுத்த படத்திற்காகவும் பேசி வருகிறார்கள். ஜனநாயகன் விஜய் இல்லாததால் அஜித் இன்னும் அதிக சம்பளம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.