1 வருஷம் 4 மாசம் 16 நாள்.. முடிஞ்சா கண்டுபிடிங்க, க்ளூ கொடுத்து ஆட்டம் காட்டும் ஶ்ரீ

Actor Shri: நடிகர் ஸ்ரீ எங்கிருக்கிறார் என்ற கவலை ரசிகர்களுக்கு பெருமளவில் இருக்கிறது. அவருடைய சமீப கால இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்த அனைவரும் கமெண்ட் பாக்ஸில் வந்து புலம்பி தீர்க்கின்றனர்.

ஊரும் வேண்டாம் உறவும் வேண்டாம் என தனியாக இருக்கும் அவரிடம் திரும்பி வா நண்பா என கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்னும் சிலர் கம்பேக் குடு ப்ரோ உனக்கான இடம் அப்படியே இருக்கு என அவரை சமாதானப்படுத்துகின்றனர்.

ஆனால் எதற்குமே அவர் பதிலளிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க விஷயத்தை கேள்விபட்ட சோசியல் மீடியா சேனல்கள் இதை வைத்தே கல்லா கட்டி வருகின்றனர்.

ஸ்ரீக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார் என பல புரளிகளும் கிளம்பி வருகிறது. அதே போல் அவருடைய பழைய நண்பர்களையும் கண்டுபிடித்து பேட்டி கண்டு வருகின்றனர்.

க்ளூ கொடுத்து ஆட்டம் காட்டும் ஶ்ரீ

இதில் அனைவரும் சொன்ன ஒரு விஷயம் ஸ்ரீக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனால் அவர் அதிகமாக ஸ்மோக் செய்வார் என்று குறிப்பிட்டனர்.

இதற்கு தற்போது ஒரு முடிவு கிட்டியுள்ளது. ஸ்ரீ இப்போது தன்னை பற்றி க்ளூ கொடுத்து முடிஞ்சா கண்டுபிடிங்க என ஆட்டம் காட்டுவது போல் இருக்கிறது.

எப்படி என்றால் எல்லோரும் தன்னை தேடும் போது மொட்டை மாடியில் வீடியோ எடுத்து எங்கிருக்கிறேன் என சொல்லாமல் சொன்னார்.

அதை அடுத்து தண்ணீர் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு நான் நல்லா இருக்கிறேன் என சொன்னார். அதையடுத்து இப்போது ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு வருடம் நான்கு மாதம் 16 நாட்கள் ஆகிவிட்டது நான் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி. உடலுக்கு கேடான கெட்ட பழக்கத்தை நான் நிறுத்தியது பெருமையாக உள்ளது.

நீங்களும் இந்த பழக்கத்தை நிறுத்தி விடுங்கள் என சொல்லி இருக்கிறார். இதன் மூலம் கடந்த இரு நாட்களாக யூடியூப் வீடியோக்களில் பேசப்பட்ட விஷயத்திற்கு பதிலடி கொடுத்தார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர். இந்த மனுஷனையா மனநலம் சரியில்லன்னு சொல்லிட்டு இருக்கோம்.

அவர் தெளிவா தான் இருக்கார். இந்த உலகத்துக்கு அவர் ஏதோ சொல்ல வருகிறார் என மீண்டும் கமெண்ட் பாக்ஸில் அலப்பறையை ஆரம்பித்து விட்டனர். ஆக மொத்தம் ஸ்ரீ ஏதோ ஒரு முடிவுல தான் இருக்கார்.