பொண்டாட்டியை காப்பாற்ற குடும்பத்திடம் பொய் சொல்லும் சரவணன்.. ஓவராக பேசி அவமானப்படுத்திய பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், எல்லோரும் வீட்டில் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோமதி கோயிலுக்கு போவதை பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தங்கமயில் வந்த பொழுது நீயும் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு எப்ப பார்த்தாலும் ஆபீஸ்ல லீவ் கிடையாது என்று சொல்லி புலம்புவாய். அதனால் நீ மட்டும் வர முடியாமல் போய்விட்டது என்று கோமதி சொல்கிறார்.

உடனே சரவணன், நீ சொல்றியா நான் சொல்லவா என்று தங்கமயிலை பார்த்து கேட்கிறார். அதற்கு தங்கமயில் நாம் ஹோட்டலில் வேலை பார்ப்பதை தான் சொல்ல சொல்கிறார் என்று நினைத்து உண்மையை சொல்ல வருகிறார். ஆனால் சரவணன், தங்கமயிலை உண்மையை சொல்ல விடாமல் பாண்டியனிடமிருந்து பொண்டாட்டியை காப்பாற்றுவதற்காக பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்.

அதாவது அம்மாவிடம் நீ கேட்டபடி தங்கமயில் ஆபீஸ்ல லீவு கேட்டுட்டு வந்து விட்டால், அதனால் உங்க கூட கோவிலுக்கு வருவாள் என்று சொல்லி தங்கமயிலை காப்பாற்றி விடுகிறார். உடனே நாம் ஐந்து பேரும் போகலாம் என்று எல்லோரும் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். ஆனாலும் தங்கமயில் சரவணனுக்கு தெரிந்ததை நினைத்து தனியாக வெளியே நின்று பீல் பண்ணுகிறார்.

அங்கே வந்த மீனா, தங்கமயிலிடம் உங்களுக்கும் மாமாக்கும் எதாவது பிரச்சனையா இரண்டு பேரும் முகமும் சரியில்லையே என்று கேட்கிறார். ஆனால் தங்கமயில் அதற்கு எதுவும் சொல்லாமல் தூக்கம் வருகிறது என்று போய் விடுகிறார். ரூம்குள் போனதும் சரவணன், தங்கமயிலிடம் சண்டை போட்டு பேசாமல் தூங்கி விடுகிறார். இதனால் தங்கமயில் ரொம்பவே பீல் பண்ண ஆரம்பித்து விடுகிறார்.

பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பிய நிலையில் செந்தில் மீனா நான்கு நாள் வீட்டில் இருக்க மாட்டாள் என்று பீல் பண்ணி பேசுகிறார். அடுத்ததாக ராஜி கிளம்பிய நிலையில் கதிருக்கு சில கண்டிஷனை போட்டு விடுகிறார். கதிரும் செலவுக்காக ராஜிக்கு பணத்தை கொடுத்து வழி அனுப்புகிறார். ஆனால் தங்கமயில் மீது சரவணன் கோபமாக இருப்பதால் காலையிலேயே எழுந்து வெளியே போயிடுகிறார்.

அதனால் தங்கமயில் கிளம்பும்போது சரவணன் இல்லை என்று ஃபீல் பண்ணுகிறார். அப்பொழுது பழனிச்சாமி, தங்கமயிலின் பேக்கை எடுத்துட்டு கார்கில் வைக்கப் போகிறார். இதை பார்த்து சுகன்யா பழனிவேலுவை முறைத்து பார்க்கிறார். அடுத்ததாக பாண்டியன் மற்றும் பழனிவேலு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து சுகன்யா போன் பண்ணி பழனிவேலுக்கு டார்ச்சர் கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் சரவணன் கடைக்கு வந்து வேலை எதுவும் இல்லை அதனால் தான் கடை வேலையை பார்க்க வந்தேன் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், செந்திலை பார்த்து இவனைப் பார்த்து திருந்திக்கோ. எப்படி பொறுப்பா நடந்து கொள்கிறான் உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட இது வராது என்று செந்திலை அவமானப்படுத்தி ஓவராக பேசிவிட்டார். இதனால் தான் செந்தில் இந்த குடும்பத்தையும் பாண்டியனையும் விட்டு தனியாக போக வேண்டும் என்று நினைக்கிறார்.