Sundar C : சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக நயன்தாராவை கதாநாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்து வருகிறார்.
ஆரம்ப காலங்களில் ரஜினியின் அருணாச்சலம், கமலின் அன்பே சிவம், அஜித்தின் உன்னை தேடி போன்ற படங்களை சுந்தர் சி இயக்கியிருந்தார். ஆனால் சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களை சுந்தர் சி இயக்கவில்லை.
இதற்கான காரணத்தையும் இப்போது கூறி இருக்கிறார். அதாவது சினிமாவை பொருத்தவரையில் மூன்று விதமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். முதலாவதாக இயக்குனருக்கு பிடித்த மாதிரி படங்களை எடுக்கக்கூடியவர்கள்.
பெரிய ஹீரோக்களில் படங்களை சுந்தர் சி எடுக்காததற்கு காரணம்
இரண்டாவது பார்வையாளர்களுக்கு அதாவது ஆடியன்ஸ்க்கு பிடித்த மாதிரி படத்தை எடுப்பவர்கள். மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் ஹீரோவுக்கு பிடித்த மாதிரி படத்தை எடுப்பவர்கள். இதில் சுந்தர் சி பார்வையாளர்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்கக் கூடியவராக கூறியிருக்கிறார்.
இதனால் தான் பெரிய நடிகர்கள் பின்னால் தான் செல்வதில்லை என்றும் கூறுகிறார். மேலும் 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்சியின் மதகத ராஜா படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்.
அதோடு அரண்மனை 4 படமும் ஹிட்டான நிலையில் கேங்கர்ஸ் படம் வெளியாகி சுந்தர்சிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கிறதா என்பதை
பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் கேங்கர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் இப்போது படு பயங்கரமாக நடந்து வருகிறது.