மீண்டும் தொடர் விடுமுறை, தியேட்டரில் குவியும் ஆடியன்ஸ்.. இந்த வாரமும் சம்பவத்திற்கு தயாராகும் குட் பேட் அக்லி

Good Bad Ugly: அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் குட் பேட் அக்லி தியேட்டரில் சம்பவம் செய்து வருகிறது. கடந்த 10ம் தேதி வெளியான இப்படம் இப்போது வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ் கூட படத்தை திரும்பத் திரும்ப பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு படம் ஜாலியாக எல்லோரையும் வைப் செய்ய வைத்திருக்கிறது.

அதனாலயே படம் வெளியாகி ஒரு வாரம் ஆன பிறகும் கூட வசூலில் நல்ல லாபம் பெற்று வருகிறது. அதன் படி தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயை வசூலித்து விட்டதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது.

சம்பவத்திற்கு தயாராகும் குட் பேட் அக்லி

அது மட்டுமின்றி விடுமுறை இல்லாத நாட்களிலும் கூட கணிசமான வசூல் கிடைத்து வருகிறது. அதன்படி செவ்வாய் கிழமை 4 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கிறது.

அதையடுத்து புதன்கிழமை ஆன நேற்று இந்திய அளவில் 5.18 கோடிகளை கலெக்ட் செய்துள்ளது. இன்றும் படத்திற்கு அதே ஆரவாரம் இருக்கிறது.

மேலும் நாளை புனித வெள்ளி என்பதால் விடுமுறை நாளாக இருக்கிறது. அதை அடுத்து சனி ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்களாக இருக்கிறது.

இதனால் படத்தின் வசூல் இந்த மூன்று நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது வரை இதன் வசூல் 184 கோடியாக இருக்கிறது.

இந்த வார இறுதி முடிவதற்குள் அது 300 கோடியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படியாக ஆதிக் ஃபேன்ன் பாயாக பெரும் சம்பவம் செய்துள்ளார்.