சீதா செய்த உதவி, மீனாவுக்கு கிடைத்த பணம்.. ஆட்டைய போட்ட விஜயா, புத்தி பேதலித்து போய் அலையும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து கார் ஓட்டிட்டு வரும் பொழுது டிராபிக் போலீஸ் அருண், எல்லோரையும் செக் பண்ணுவது போல தான் முத்து காரையும் நிப்பாட்டி குடித்துவிட்டு வந்து இருக்கியா என்று கேட்கிறார். அதற்கு முத்து நான் குடிக்கவில்லை என்று சொல்லிய பொழுது அருண் அந்த மிஷினில் ஊத சொல்லி கேட்டார். ஆனால் முத்து நான் தான் குடிக்கவில்லை என்று சொல்கிறேன். பின்னே எதற்கு நான் ஊதணும் என்று பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்.

உடனே பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு டிராபிக் போலீஸ் வந்து முத்துவை ஊத சொல்லும் பொழுது எதுவும் எதிர்த்து பேசாமல் முத்து ஊதி விட்டார். இதை ஆரம்பத்தில் அருண் கேட்டிருக்கும் பொழுது செய்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் தேவையில்லாமல் பிரச்சனை முத்து பண்ணிவிட்டு அருணை மன்னிப்பு கேட்க சொல்லி சொல்கிறார். உடனே வேறு ஒரு டிராபிக் போலீஸ் அதெல்லாம் முடியாது என்று சொல்லி முத்துவே போக வைத்து விட்டார்.

இருந்தாலும் முத்துவுக்கு அந்த அருணை பழிவாங்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது. உடனே செல்வத்துக்கு போன் பண்ணி ஒயின்ஷாப்புக்கு வர சொல்லிவிட்டார். அங்கே போன முத்து நிதானம் இல்லாமல் குடித்துவிட்டு செல்வத்தை குடிக்க விடாமல் கார் ஓட்டிட்டு ட்ராபிக் போலீஸ் நின்ற அதே இடத்திற்கு வர வைத்து விட்டார். வந்ததும் வழக்கம் போல் டிராபிக் போலீஸ் அருண், செல்வத்தை ஊத சொல்கிறார்.

செல்வமும் ஊதிய நிலையில் குடிக்கவில்லை என்று தெரிந்து விட்டு அவர் போக சொல்கிறார். ஆனால் பின்னாடி உட்கார்ந்து கொண்டு வரும் முத்து நான் குடித்து இருக்கிறேன் என்னை உன்னால் என்ன பண்ண முடியும். சட்டப்படி கார் ஓட்டுபவர்கள் தான் குடிக்க முடியாது, நான் குடிக்கலாம் என்று வேண்டுமென்றே அருணை வெறுப்பேற்றி போகிறார்.

அதாவது அருண் அவருடைய கடமையை தான் செய்கிறார் என்று கூட உணராத முத்து தேவையில்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு போய் மீனாவிடமும் சண்டை போட்டு நீ இப்பொழுது பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாய். அதனால் தான் கொஞ்சம் திமிராக பேசுகிறாய் என்று மீனாவையும் திட்டி புத்தி கெட்டது போல் பேச ஆரம்பித்து விட்டார். மீனா நீங்கள் தற்போது நிதானம் இல்லாமல் இருக்கீங்க பேசாமல் தூங்குங்க என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக மீனாவுக்கு டெபாசிட் பண்ண வேண்டும் என்று அம்மா வீட்டுக்கு சென்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது சீதா நான் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று கொடுத்து மீனாவை டெபாசிட் கட்ட சொல்கிறார். மீனாவும் அந்த பணத்தை வீட்டிற்கு எடுத்துட்டு வந்து மறுநாள் கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறார். அப்படி மறுநாள் மண்டபத்திற்கு அந்த பணத்தை எடுத்துட்டு போகும் பொழுது விஜயா அதை நோட் பண்ணி விடுகிறார்.

உடனே விஜயா, சிந்தாமணிக்கு போன் பண்ணி மீனா மஞ்ச பையில் பணத்தை எடுத்துட்டு மண்டபத்தில் பணம் கட்டுவதற்கு போகிறார். அதை எப்படியாவது ஆட்டையை போட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் அவள் பணத்தை கட்டி விட்டு இந்த ஆர்டரையும் பெற்றுவிடுவார் என்று சிந்தாமணி இடம் போட்டு கொடுத்து விட்டார்.

உடனே சிந்தாமணி அடியாட்கள் மூலம் மீனா கொண்டுவரும் பணத்தை பிடுங்கி ஆட்டையை போட்டு விட்டார். இந்த பிரச்சனை எல்லாம் சமாளித்து எப்படி மீனா இந்த பணத்தைக் கட்டி டெக்கரேஷன் ஆர்டர் வாங்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.