Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் முதலிடத்தை பெற்று வருகிறது. இதற்கு காரணம் கதை ஒரு விதத்தில் பிடித்திருந்தாலும் இன்னொரு பக்கம் ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வருவதால் தான். ஆனால் தற்போது கதை சரியில்லாமல் தடம் பிரண்டு வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்று வருகிறது.
ஆனாலும் இந்த நாடகத்தை விட மக்களின் பேவரட் சீரியலாக தூக்கி கொண்டாடுவது மகாநதி சீரியலை தான். இருந்தாலும் மகாநதி சீரியல் டிஆர்பி ரேட்டிங் இல் டாப் 5 இடத்தை பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் டைமிங் பிரச்சினைதான். அதாவது மகாநதி சீரியல் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் டிவியில் போடும்போது பார்க்க முடியாமல் ஹாட்ஸ்டார் இல் பார்க்கும் படியான ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது.
தற்போது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மகாநதி சீரியல் நேரம் மாற்றப்படுகிறது. வருகிற 28ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு மகாநதி சீரியலை போட்டுவிட்டு அதற்கு பதிலாக ஆகா கல்யாணம் சீரியலை 6.30 மணிக்கு மாற்றப் போகிறார்கள். மேலும் புத்தம் புதுசாக வரப்போகும் பூங்காற்று திரும்புமா சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பு செய்து ஏற்கனவே 10 மணிக்கு வருகின்ற சிந்து பைரவி சீரியலை 6மணிக்கு ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.
அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் இனி மகாநதி சீரியல் அதிக புள்ளிகளை பெற்று விஜய் டிவியின் முதல் இடத்திற்கு வந்துவிடும். அத்துடன் சன் டிவியில் உள்ள சீரியல்களை பின்னுக்கு தள்ளும் வகையில் தற்போது விஜய் டிவியில் இரண்டு பேவரிட் சீரியல்கள் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் மகாநதி சீரியல் மற்றும் அய்யனார் துணை சீரியல். இந்த இரண்டு சீரியலுமே மக்களை கவர்ந்து விட்டது.