Amir pavni Marriage: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனாக கலந்து கொண்ட பாவணி இறுதிப் போட்டி வரை பயணித்தார். இதில் பாதியிலேயே நுழைந்த அமீர், பாவணியை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் பிடித்துப் போய் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கடந்த மூன்று வருடங்களாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.
இதனை அடுத்து பிரியங்காவின் கல்யாணம் மூன்று நாட்களுக்கு முன் முடிந்த நிலையில் தற்போது பிரியங்காவின் தலைமையில் பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டி விட்டார். இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்ற பொழுது பாவனி கழுத்தில் அமீர் முதல் முடிச்சை போட்ட பிறகு நாத்தனார் முறைக்கு பிரியங்கா அடுத்து இரண்டு முடிச்சை போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி விட்டார்.
பாவணி ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவர் இறந்து விட்டதால் இனி திருமணமே வேண்டாம் என்ற நிலையில் உறுதியாக இருந்தார். அதனால் ஆரம்பத்தில் அமிரின் காதலுக்கு நோ சொல்லி வந்தார். இருந்தாலும் அமீரின் உண்மையான காதலை புரிந்து கொண்ட பாவணி எஸ் சொல்லியதால் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இத்தனை நாட்களாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள்.

அதன் அடையாளமாக தற்போது இவர்களுடைய திருமணம் தடபுடலாக நடந்து முடிந்து விட்டது. இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.