Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் வாழ்க்கையை பகடைக்காயாக வைத்து சுதாகர் ஆசைப்பட்ட மாதிரி பாக்யாவின் ஹோட்டலை கைப்பற்றி விட்டார். இது பாக்யாவிற்கு ஆரம்பத்திலேயே தெரிந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தியதால் பாக்கியாவால் எதுவும் பண்ண முடியாமல் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி பத்திரத்திலும் கையெழுத்து போட்டு விட்டார்.
அந்த வகையில் இனியாக்கு கல்யாணமான முதல் நாளிலேயே சுதாகர் அவருடைய நரித்தந்திரத்தை காட்டிவிட்டார். பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து இனிமேல் இது என்னுடைய ஹோட்டல் உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி பாக்யாவை வெளியே துரத்தும் படி அனுப்பி விட்டார். இதனால் நொந்து போன பாக்கியா ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் இருந்து புலம்பிய படி செல்வியை கூட்டிட்டு வெளியே போய்விட்டார்.
ஆனாலும் இதற்கு முடிவு இல்லை என்பதற்கு ஏற்ப பாக்கியா மறுபடியும் நான் வளர்ந்து நிற்பேன் என்று செல்விடம் சொல்கிறார். அந்த வகையில் சுதாகர் பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து இனி இந்த ரெஸ்டாரண்டுக்கு உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஹோட்டல் பக்கத்தில் கூட காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று சொல்லி அடிச்சு எல்லாத்தையும் வெளியே துரத்துங்க என்று மொத்த வன்மத்தையும் காட்டி விட்டார்.
இதனால் கடுப்பான பாக்கியா, சுதாகரிடம் சவால் விடும் விதமாக கண்டிப்பா நீங்க செஞ்ச இந்த செயலுக்காக பலனை அனுபவிப்பீங்க என்று சொல்லி விடுகிறார். அத்துடன் செல்விடம் நாம் எதுக்குமே லாயக்கில்லை என்று சொன்னவங்க மத்தியில் நாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து காட்டி இருக்கோம். அதே மாதிரி இனிமேலும் நாம் வளர்ந்து மேலே வருவோம் என்று ஆவேசமாக சவால் விடுகிறார்.
இதெல்லாம் சுதாகரின் சூழ்ச்சியாக இருந்தாலும் இனியாவின் வாழ்க்கையை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் இனியாவின் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்க போகிறது, இனியாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன பண்ணுவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தகுதி தராதரம் பார்த்து ஆகாஷை துன்புறுத்திய கோபிக்கு செல்வி விட்ட கண்ணீர் மூலம் கோபி பாசமாக நினைத்த இனியாவின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக நிற்கப் போகிறது.