சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துப் போகும் சீரியல்.. திருஷ்டியாக இருக்கும் கயல், சிம்மாசனத்தில் அன்பானந்தி

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் அனைத்துமே மக்கள் மனதை கவர்ந்த நிலையில் பிரைம் டைமிங்கில் வரும் சீரியலுக்கு எப்பொழுதுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் கயல் சீரியலுக்கென்று இல்லத்தரசிகள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனாலதான் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால் தற்போது கயல் எழில் சந்தோசத்தை விட தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருப்பதால் கயல் சீரியலை பார்ப்பவர்களுக்கு போர் அடித்து விட்டது. அதனால் இந்த சீரியலை வேறு விதமாக கொண்டு போங்க அல்லது முடித்துவிட்டு புதுசாக ஒரு சீரியலை கொண்டு வாங்க. பிரைம் டைமிங்கில் இப்படி ஒரு மொக்க சீரியலை போட்டு எரிச்சல் படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சன் டிவியில் திருஷ்டி பொம்மையாக கயல் சீரியல் இருந்தாலும் இன்னொரு சீரியல் சிம்மாசனத்தில் இருக்கும் அளவிற்கு விறுவிறுப்பான காட்சிகளுடன் வரப்போகிறது. அதாவது சிங்க பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி மற்றும் மகேஷ் இவர்கள் 3 பேரின் நடிப்புக்காக தான் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

அதிலும் அன்பு ஆனந்தியின் காதல் ரொம்பவே புனிதமானதாகவும் இவர்கள் ரெண்டு பேரும் தான் ஒன்று சேர வேண்டும் என்று மக்கள் வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆனந்தி கர்ப்பம் என்று தெரிந்த நிலையில் அனைவருடைய சந்தேகமும் அன்பு மீது தான் திரும்புகிறது.

ஆனால் அன்பு மீது ஒரு துளி கூட ஆனந்திக்கு சந்தேகம் வராத பட்சத்தில் தோழிகளுக்கும் அதை புரிய வைக்க வேண்டும் என்று ஆனந்தி துணிந்து விட்டார். அந்த வகையில் குடோனுக்கு அன்பு வர சொல்லிய ஆனந்தி அதற்கு முன் அங்கே மொபைலில் வீடியோ காலில் தோழிகளுக்கு கால் பண்ணி வைத்து விடுகிறார்.

பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆனந்தி, அன்பு கிட்ட நெருங்கினால் அன்புவின் ரியாக்ஷன் எந்த மாதிரி இருக்கும் என்பதை புரிய வைப்பதற்காக ஆனந்தி ஒரு டிராமா போடுகிறார். அந்த வகையில் அன்பு கண்ணியமானவன் என்பதை இந்த ஒரு வீடியோ மூலம் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

ஆனாலும் கருணாகரன் மற்றும் மித்ரா இரண்டு பேரும் இந்த ஒரு விஷயத்தை மகேஷ் காதில் போட்டு இதை வைத்து ஏதாவது குளிர் காயலாம் என்று பிளான் பண்ணுகிறார்கள். ஆனாலும் கூடிய சீக்கிரத்தில் ஆனந்தியின் கர்ப்பம் அன்புக்கு தெரியவரும். அதன் பிறகு ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என்று அன்பு கண்டுபிடித்து விடுவார்.