ஒரே வருஷத்தில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டி தூக்கிய த்ரிஷா.. அட இத யாராச்சும் நோட் பண்ணுனீங்களா?

Trisha: கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கணும்னு சொல்லுவாங்க, த்ரிஷா விஷயத்துல கோட்டையவே பிளந்துகிட்டு கொடுத்து இருக்கு இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாமல் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தார் திரிஷா. ஒரு வகையில் திரிஷா அப்படி ஆனதற்கு நயன்தாராவின் வரவும் ஒரு காரணம்.

யாராச்சும் நோட் பண்ணுனீங்களா?

ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. திரிஷா, நயன்தாராவை ஓரம் கட்டி விட்டு லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கும் அடி எடுத்து வைத்து விட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவின் வாழ்க்கையை திருப்பி போட்டு விட்டது.

அதை தொடர்ந்து லியோ படம் திரிஷாவை மீண்டும் உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் 2025 இல் ஆரம்பித்து நான்கே மாதத்தில் திரிஷா மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

அதாவது இந்த வருடத்தில் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை பெரிய ஹீரோக்களின் படம் ரிலீஸ் ஆகிறது. பிப்ரவரியில் விடாமுயற்சி, ஏப்ரல் மாதத்தில் குட் பேட் அக்லி, ஜூன் மாதத்தில் தக் லைஃப், அக்டோபர் மாதத்தில் சூர்யா 45 திரைப்படம்.

இது அத்தனைக்கும் ஹீரோயின் த்ரிஷா தான். ஆக மொத்தத்தில் த்ரிஷா காட்டில் அதிர்ஷ்ட மழை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.