Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலுக்கு போன் பண்ணிய சரவணன் ஹோட்டலில் வேலை பார்த்ததற்கான காரணம் சர்டிபிகேட் தொலைந்து போனது மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது என்னிடம் பொய் சொல்லி மறைக்கிறியா என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் நான் உங்களிடம் எந்த பொய்யும் சொல்லவில்லை.
சர்டிபிகேட் இல்லாததால் ஆபீஸ் வேலைக்கு போக முடியாத ஒரு சூழ்நிலை அமைந்துவிட்டது. அதனால் தான் வீட்டில் இருப்பவர்களிடம் உண்மையை சொல்லாமல் ஹோட்டலில் வேலை பார்த்தேன் மற்றபடி என் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார். உடனே சரவணன் அப்படி என்றால் உன் சர்டிபிகேட்டை நான் வாங்கி தருகிறேன். நீ எந்த தேதியில் காலேஜ் படித்து முடித்தாய் என்ன காலேஜில் படித்தாய் போன்ற எல்லா விவரமும் எனக்கு அனுப்பு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
உடனே தங்கமயில் ஐயோ அப்படி என்றால் நான் படிக்கவில்லை என்ற விஷயம் தெரிந்து விடுமே. அது இதைவிட மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என்ற பயத்தினால் கோமதியிடம் நான் ஊருக்கு போக வேண்டும் என்று சொல்கிறார். உடனே அங்கு இருப்பவர்கள் நீ தனியாக போக வேண்டிய அவசியம் என்ன, ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்கள். அதற்கு தங்கமயில் நான் பார்க்கும் ஆபீஸிலிருந்து உடனடியாக என்னை வர சொல்லிட்டாங்க.
நான் போகவில்லை என்றால் என்னுடைய வேலையை போய்விடும் என்று சொல்லி அங்கு இருப்பவர்களை சமாளித்து ஊருக்கு கிளம்பி விட்டார். அடுத்ததாக ராஜி, கதிரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக நடன போட்டியில் கலந்து கொண்டு வின் பண்ணி பைக்கை வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி ப்ராக்டிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த மீனா என்ன என்று கேட்கும் பொழுது நான் எப்படியாவது இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.
உடனே மீனா அதற்கு தான் அத்தை நோ சொல்லிவிட்டார்களே, பிறகு எப்படி ஆட முடியும் என்று கேட்கிறார். அதற்கு ராஜி, நீங்க போயி எப்படியாவது பேசினால் எனக்கு பெர்மிஷன் கிடைத்துவிடும் என்று மீனாவை ஐஸ் வைக்க ஆரம்பித்து விட்டார். உடனே மீனா, கோமதியிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டார். அந்த வகையில் ராஜி டான்ஸ் ஆடி வின் பண்ண போகிறார்.
அடுத்ததாக கதிர், காலேஜுக்கு கிளம்பும்போது திரும்ப இடமெல்லாம் ராஜி இருப்பது போல் அவருக்கு ஒரு பிம்பமாக தோன்றுகிறது. அத்துடன் ராஜி இல்லாதது கதிரை ரொம்ப பீல் பண்ண வைக்கிறது. அந்த வகையில் ராஜி ஊரிலிருந்து வந்த பிறகு ராஜி மற்றும் கதிருக்கு ஒரு நல்ல ஒற்றுமை ஏற்பட போகிறது. அடுத்ததாக கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செந்தில், மீனாவை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது கடைக்கு வந்த பாண்டியன் பாங்கில் இருந்து பணத்தை எடுத்துட்டு வரச் சொல்லி செந்தில் இடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். அந்த பணத்தை வைத்து தான் அரசிக்கு கார் வாங்க வேண்டும் என்று சொல்கிறார். அப்படி பணத்தை எடுக்கும் பொழுது செந்திலுக்கு மீனாவின் அப்பா போன் பண்ணி பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். இந்த விஷயத்தில் செந்தில் ஏதோ ஒரு குளறுபடி பண்ண போகிறார். இதனால் பாண்டியன் வீட்டில் ஒரு பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.