இனியாவிற்கும் நாமத்தை போட்ட மாமனார், ஏமாந்த பாக்யா குடும்பம்.. கோபி கண்ணில் மண்ணை தூவிய மருமகன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யா ரெஸ்டாரண்ட் இனியாவின் பெயருக்கு மாறிவிட்டது என்று பாக்யாவிற்கு தெரிந்த நிலையில் மொத்தமாக உடைந்து போய்விட்டார். ஆனாலும் கோபி சொன்னது என்னவென்றால் அந்த ரெஸ்டாரண்டுக்கு நீ தான் ஓனர், உன்னுடைய இஷ்டப்படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.

தற்போது அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பாக்கியம், ரெஸ்டாரண்டில் இருக்கும் பொழுது அங்கே வந்த சுதாகர் பாக்யாவை வெளியே அனுப்ப சொல்லிவிட்டார். அதாவது மொத்த கண்ட்ரோலும் என்னுடைய கைக்கு வந்து விட்டது. இனி நான் சொல்வது தான் எல்லாம் நடக்கும், என்னுடைய ரெஸ்டாரன்ட் தான் இது என்று சொல்லி பாக்கியவிடம் திமிராக பேசிவிட்டார்.

அதற்கு பாக்கியம் இது இனியாவின் பெயரில் இருக்கக்கூடிய ரெஸ்டாரன்ட், அவள் தான் எந்த முடிவினாலும் எடுக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் சுதாகர் சிரித்துக் கொண்டே இனியாவிடமிருந்து கையெழுத்து வாங்கி என்னுடைய பெயருக்கு இந்த ரெஸ்டாரண்டை மாற்றிவிட்டேன் என்று சொல்கிறார்.

இதனை எதிர்பார்க்காத பாக்கிய அதிர்ச்சியில் ஏமாற்றத்துடன் இருக்கிறார். நம்மகிட்ட இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் நம்ம பொண்ணு கிட்டயாவது இந்த ஹோட்டல் இருக்கிறதே என்ற ஒரு நினைப்பில் பாக்கியம் இருந்தார். அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக இனியாவிற்கே நாமத்தை போட்டு அந்த ஹோட்டலை சுதாகர் பிடிங்கி விட்டார்.

இந்த பக்கம் இந்த மாதிரி எல்லாம் பண்ணிவிட்டு இன்னொரு பக்கம் இனியா நித்திஷ் உடன் பாரிஸ் போவதற்கு எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டார். அந்த வகையில் இப்போதைக்கு பாக்கியாவின் நிலைமை என்னவென்று இனியாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. இதை பற்றி கோபி, சுதாகரிடம் கேட்டாலும் இனியா ஹனிமூன் போவதால் ஹோட்டல் பொறுப்பிலிருந்து இப்போதைக்கு இனியாவிற்கு ரெஸ்ட் கொடுத்து நான் பண்ண வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயரை மாற்றி இருக்கிறேன் என்று சொல்லி கோபி கண்ணிலேயே மண்ணைத் துவ போகிறார்.

கோபியும் எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டி விட்டு பாக்யாவிடம் வந்து சமாதானப்படுத்த போகிறார். ஆனால் பாக்கியாவிற்கு தெரிந்து விட்டது இந்த சுதாகர் பிளான் பண்ணி தான் எல்லாத்தையும் பண்ணுகிறார் என்று. இதை கூட அங்கே யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு எல்லாம் மக்காக இருக்கிறார்கள்.